சொற்களால் தின்னப்பட்டவன்

என் சொல் என் தேகம் என் சொல் என் சுவாசம் என் சொல் என் மரணம் என் சொல் என் தீர்வு ஒருநாள் என் சொற்களெல்லாம் திரண்டு வந்து என்னைப் புசிப்பது போல் கனாக்கண்டு எழுந்தேன் அது கனா அல்ல என் உடலை சொற்கள் தின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன் இதை எழுதும்போதே ரோமக் கால்கள் சிலிர்க்கின்றன ஆம் என் உடலை சொற்கள் தின்று கொண்டிருந்தன பார்த்துப் பார்த்து வளர்த்த உடல் சொற்களுக்குத் தீனியாவது கண்டு ஒருக்கணம் வருந்தினாலும் … Read more

இன்றைய கவிதை: ஸ்தூல சாட்சி

”தேன்சிட்டே, தேன்சிட்டே, எங்கே இரண்டு நாட்களாகக் காணோம்?” “ஊருக்குப் போயிருந்தேன்.” ”ஓ, அதெல்லாம் உங்களுக்கும் கூட உண்டா?” “பின்னே, ஊரென்பது உங்களுக்கு மட்டுமானதா?” தேன்சிட்டு கழுத்தை ஒரு பக்கம் நொடித்தது. செக்ஸியாக இருக்கிறதே என்றெண்ணிய மறுகணமே மானசீகமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டேன். ஊரில் என்ன விசேஷம் என்றதற்கு மகளோடு போயிருந்தேன் என்றது தேன்சிட்டு ”ஓ, அதெல்லாம் உங்களுக்கும் கூட உண்டா?” “பின்னே, உங்களுக்கு மட்டும்தானா?” என்று சொன்ன தேன்சிட்டு மீண்டும் கழுத்தை நொடித்தது. செக்ஸி செக்ஸி என … Read more