த அவ்ட்ஸைடர் 23

அதோடு விடவில்லை ஜூலியா.  நான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ரமோனிடம் சொன்னால் உங்கள் இருவரையும் கழுத்தை நெறித்துக் கொன்று விடுவேன் என்றும் சொன்னாள்.  சூஸானா தன் ’புதிய கணவன்’ ஆர்மாந்தோவுடன் பராகுவாய் திரும்புகிறாள்.  மூன்று வாரங்களுக்கு முன்புதான் கணவன் ஃப்ரான்சிஸ்கோவுடன் அசுன்ஸியோனில் சுற்றித் திரிந்தாள்.  வழக்கம்போல் விமான நிலையத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.  சாதாரணமாகவே அசுன்ஸியோன் விமான நிலையத்தில் யார் வேண்டுமானாலும் போகலாம், வரலாம்; தேன் நிலவுத் தம்பதிகளை யார் தொந்தரவு செய்யப் போகிறார்கள்?  ஆர்மாந்தோ ஒரு … Read more

த அவ்ட்ஸைடர் : 22

இன்றும் வினித்திடம் பேசினேன்.  அவர் ஒரு கேள்வி கேட்டார். ”உங்களைப் பற்றிய ஆவணப்படம் குறித்துதான் இந்த அவ்ட்ஸைடர் தொடரை எழுத ஆரம்பித்தீர்கள்.  இப்போது சீலேயிலிருந்து கிளம்பி அர்ஜெண்டினா, கொலம்பியா, பராகுவாய், நிகாராகுவா என்று எங்கெங்கோ சுற்றுகிறீர்களே, படம் பார்ப்பவர்கள் இது பற்றியெல்லாம் படத்தில் வரும் என்று எதிர்பார்க்க மாட்டார்களா?  சீலே போவதற்கே பணம் தட்டுப்பாடாக இருக்கிறதே?  இங்கெல்லாம் எப்படிப் போவீர்கள், அதுவும் ரெண்டு பேர்?” சீலேயுடன் படத்தை முடித்து விட்டு, இறுதியில் ஒரு அறிவிப்பைப் போட்டு விட … Read more

கனவு வைன் யோகா (மூன்றாம் அத்தியாயம்) Revised

(சற்று முன்னர் பதிவேற்றம் செய்த கதையில் நிறைய பிழைகள் இருந்ததால் பிழை திருத்தம் செய்து, கதையிலும் சில நகாசு வேலைகள் செய்து இப்போது திரும்பவும் ஏற்றியிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.) பரோலில் வெளியே வரும் கைதி திரும்பச் செல்வதற்குத் தாமதமாகி விட்டால் காவல் துறை என்ன செய்யும்?  அந்த சூழலைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  நான் இந்த பூலோகத்தில் எங்கே போயிருந்தாலும் பத்தினி ஃபோன் செய்யும் போது எடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் ஃபோனிலேயே பெரும் ரகளை … Read more

தூக்கப் பஞ்சாயத்து

இந்தத் தூக்கப் பஞ்சாயத்து இன்னும் ஓயாது போலிருக்கிறது.  இதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு ஆலோசனை.  எழுத்தாளர்களின் பேச்சைக் கேட்டோ, அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தோ உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.   ஏனென்றால், எழுத்தாளர்கள் அதிமனிதர்கள்.  அவர்கள் செய்வதைப் பார்த்து நீங்களும் செய்தால் அது உங்களைப் படுகுழியில்தான் தள்ளும். உதாரணமாக, சாரு வைன் அருந்துகிறார் என்று நீங்களும் அருந்தினால் நீங்கள் காலி.  நான் அஞ்சு வருடம் குடிக்காமல் இருப்பேன்.  வேறு யாராலும் முடியாது. ஆகவே, எழுத்தாளர்கள் எழுதி வைத்துள்ளவற்றைப் படியுங்கள்.  … Read more

த அவ்ட்ஸைடர் (21): ஒரு புரட்சிக்காரனின் சரித்திரம்

1980.  பராகுவாயின் சர்வாதிகாரி ஸ்த்ரோஸ்னர்தான் (Stroessner) அன்றைய தினத்தில் மிக நீண்ட காலமாக பதவியில் இருந்து கொண்டிருந்தவன்.  இருபத்தைந்து ஆண்டுகள்.  அந்த இருபத்தைந்து ஆண்டுகளும் பராகுவாயில் ஸ்த்ரோஸ்னரின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒரு முணுமுணுப்பு கூட எழவில்லை.  அந்த அளவுக்கு நாடு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.   மிகப் பெரும் புரட்சியாளனாகிய ஸாந்தினோவைக் கொலை செய்த சொமோஸாவினால் கூட நிகாராகுவாவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  நாட்டை விட்டு ஓடி விட்டான்.  ஆனால் பராகுவாயில் ஸ்த்ரோஸ்னரின் இரும்புக் … Read more

த அவ்ட்ஸைடர் (20)

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் நான் எப்படி இருந்தேனோ அம்மாதிரியான உணர்ச்சிக் குவியலில், உணர்ச்சிக் கொந்தளிப்பில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன்.  எந்த அளவுக்கு என்றால், இந்தக் கணம் வரை எலான் மஸ்க் யார் என்றோ அவர் பெயர் ஏன் இப்படி அடிபடுகிறது என்றோ தெரியவில்லை.  முந்தாநாள் வரை எலான் மஸ்க் ஒரு வாசனைத் திரவியம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  பிறகுதான் அது ஒரு மனிதர் என்று தெரிந்தது.  அவர் ஒரு வலதுசாரி என்றும் ஒரு புதுவகை … Read more