கடைசி கலவி, கடைசி கவிதை

இறைவிஉனக்காக உன்னைப் பற்றியேஎழுதுகிறேன்பதிலுக்கு உன் ஒரு சொல்ஒரு கோடி நட்சத்திரங்களாய்என் மார்பில் உதிரும் ஆனால் இப்போதுஉன் பார்வையின் பாதை மாறி விட்டதுஎன் வார்த்தைகள்காற்றில் கரையும் எரிகற்கள் மூச்சு நிற்காமல் இருக்கவே எழுதுகிறேன்ஆனால்உனக்கு இது மூச்சு முட்டுவதாகஇருக்கிறதோ என்னவோ உனக்காக எழுதுவதைப்படிக்கிறாயாஎனத் தெரியாமல் எழுதிஎன்ன பயன் ஒவ்வொரு கலவியும்கடைசி கலவி எனஒவ்வொரு சொல்லும்கடைசி முத்தமெனஉன் நிழலில் விழுந்துமறைகிறது

ஒரு கனவின் துண்டிக்கப்பட்ட நிழல்

நிழல்களின் மௌனத்தில்அவள் வார்த்தைகள்’செக்ஸ் இனி வேண்டாம்நண்பர்களாக இருப்போம்’ காற்று தன் மூச்சை இழந்ததுஇதயத்தின் கதவுஒரு முடிவில்லா இருளில் மூடப்பட்டது. ’அப்படியானால்,நான் உன்னைத் தொட மாட்டேன்உன் புன்னகையின் நதியில் நீந்த மாட்டேன்உன் கண்களின் வானத்தில் பறக்க மாட்டேன்’ ஏன் என்றாள் கண்கள் கலங்க ஏனென்றால் நான் இருக்க மாட்டேன் உன் நினைவுகளில் மறையும் நிலவாவேன்

ஒரே ஒரு சொல்

நள்ளிரவில் இந்த மொட்டைமாடியில் தனித்திருக்கிறேன் கையில் வைன் உன் நினைவு என்னைப் பித்தனாக்குகிறது உன் ஒரே ஒரு சொல் என்னை மீட்டெடுக்கும் நீ நித்திரையில் இருப்பாய் இந்த வாதை தாங்க முடியவில்லை நட்சத்திரங்களோடும் நிலவுடனும் உரையாடுகிறேன் உன் ஒரு சொல் ஒரே ஒரு சொல் என்னுயிரைக் காக்கும்

கருணை கொள், இறைவி!

காதை அறுத்துக் கொடுத்தானாம் கழுத்தை அறுத்துக் கொடுத்தானாம் எல்லாம் தெரியும் நீ இல்லாவிட்டால் நான் செத்து விடுவேனென உனக்குத் தெரியுமா இல்லையா சொல் தெரிவதற்காக நான் செத்தால் உன்னைப் பார்க்க முடியாது அது ஒன்றே என்னைத் தடுக்கிறது இல்லாவிடில் அதையும் செய்து முடிப்பேன் என் தங்கமே

ரிஷியிடமிருந்து ஒரு கடிதம்

டியர் சாரு, நான் கோவா போகவில்லை. ஆரோவில் அருகிலேயே தங்கிவிட்டேன். பெண்கள் பெண்கள் என்று அலைந்தது போதும்! என்னுடைய Art Exhibition நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. அதில் கவனம் செலுத்துவோமென்று முடிவு செய்தென். இன்று ஆரோவில் உள்ளே நடக்கும் ஜிப்ஸி Festivalக்கு சென்றிருந்தேன். உள்ளே வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் கர்ண கொடூரம். இசையும் பயங்கர Amature!சுற்றிலும் அழகிகள். அந்த அழகிகளை பிடிப்பதற்கு இளைஞர் கூட்டம் போட்டிப் போட்டு கொண்டிருந்தது. ஒரு பக்கம் மரண மொக்கையான இசை குழு … Read more

ஒளிந்து வாழும் கூட்டம்

பெண்களும் கடவுளும் ஒன்று கருணையற்ற கூட்டம் எழுதியின்னும் ஈரம் காயவில்லை அடுத்துவொரு ப்ளூ டிக் கவிதையை அனுப்பி விட்டான் எல்லாம் என் தலையில் ஓத்த விதி இன்று சுந்தர் சருக்கையுடன் சந்திப்பு அதனால் அவர் புதினத்தைத் தேர்வுக்குப் படிப்பது போல் ப்டித்துக்கொண்டிருந்தேன் அதற்கிடையில் வந்தது ப்ளூ டிக் பூதம் எனக்கு வாட்ஸப்பில் 569 நண்பர்கள் அவ்வளவு பெயரையும் தனித்தனியாய் எண்ணியது தனிப்புராணம் 569இல் 549 பேர் ப்ளூ டிக்கை மறைத்துள்ளார் எனக் கண்டேன் சிலரை விசாரித்தேன் மருத்துவர் … Read more