பெட்டியோ மற்றும் என்னுடைய ஒட்டு மொத்த புனைவெழுத்து குறித்து அவந்திகா

ஞாயிறு மாலை ஸீரோ டிகிரி அரங்கிலிருந்து கிளம்பும் தறுவாயில் எனக்கு பெட்டியோ பிரதி வேண்டும் என்று கேட்டாள் அவந்திகா. எடுத்துக் கொடுத்தேன். நேற்று இரவு பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி இரண்டே கால் மணி அளவில் படித்து முடித்து விட்டதாகச் சொன்னாள். காலையில் பெட்டியோ நாவலின் முதல் பக்கத்தில் அவள் எழுதியிருந்த வாசகங்கள் இவை: அன்புள்ள சாரு, உன் அன்பின் நினைவாக, நம் உறவின் நினைவாக, என் கடவுளுக்கும் மேலான சாருவிற்கு இதை நான் அர்ப்பணிக்கிறேன். என் நினைவுகளும், … Read more

புத்தக விழா

திங்கள்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் புத்தக விழாவுக்கு வர மாட்டேன். புதன்கிழமை அன்று மாலை நாலரை மணி அளவில் ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எஃப் 19

ஒரு தூக்குக்கைதியின் வாக்குமூலம்

வணக்கம். நான் ‘ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்’ நூலின் ஆசிரியர் தூக்கு செல்வம்.இந்த நூல், வாழ்நாள் அனுபவத்திலிருந்து எழுதப்பட்ட ஒரு சிறைச்சாலை நினைவுக் குறிப்பு. இது மரண தண்டனைக் கைதிகள் அறையின் உள்ளே உள்ள வாழ்க்கையின் வடிகட்டப்படாத சாட்சியம். இது குற்ற உணர்வு, மனிதநேயம், நீதி, மனவருத்தம் மற்றும் சிறைச் சுவர்களுக்குப் பின்னால் உள்ள உயிர்வாழ்தல் ஆகியவற்றை ஆராய்கிறது. இது வெறும் குற்றம் அல்லது தண்டனையைப் பற்றிய கதை மட்டுமல்ல, நம்பிக்கை அரிதாக இருக்கும்போதும், காலம் உறைந்து … Read more

புத்தக விழா – 3

பழங்களில் எனக்குப் பிடித்தது எலந்தப் பழம். ஆனால் அது பரவலாகக் கிடைப்பதில்லை. புத்தக விழா நடக்கும் இடத்தின் மைதானத்தில் ஒரு அம்மாள் கூடையில் எலந்தப்பழம் விற்பார்கள். வருடா வருடம் புத்தக விழா நடக்கும்போது சமயம் கிடைக்கும்போது அதை வாங்கித் தின்பது வழக்கம். நேற்று புத்தக விழா முடிந்து வெளியே வந்து வாங்கும்போது போலீஸ் வந்து அந்தப் பெண்மணியை விரட்டி விட்டார். இருந்தாலும் என் நண்பர் அந்தப் பெண்மணியைத் தொடர்ந்து சென்று வாங்கிக் கொண்டு வந்தார். நாலைந்து பேர் … Read more

புகைப்படங்களும் தமிழரின் வரலாற்று உணர்வும்…

தில்லியின் அந்தப் பிரதான சாலையின் அப்போதைய பெயர் கர்ஸன் ரோடு.  இப்போது கஸ்தூர்பா காந்தி மார்க் என்று அழைக்கப்படுகிறது.  1978இல் நான் தில்லி சிவில் சப்ளைஸ் அலுவலகத்தில் சேர்ந்த போது கர்ஸன் ரோட்டில் இருந்த பிராந்திய அலுவலகத்தில்தான் பணி செய்ய அனுப்பப்பட்டேன்.  அந்த அலுவலகத்தின் அடுத்தாற்போல் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் தி. ஜானகிராமன் குடியிருந்தார்.  அப்போது அவர் அகில இந்திய வானொலியில் அதிகாரியாக இருந்தார்.  அந்த கர்ஸன் ரோடு அலுவலகத்தில் நான் ஒரு ஆண்டு பணியாற்றினேன்.   ஒரே … Read more