ஆண் பால் பெண் பால்

பூனை நாய்களின்
பெண்ணினத்தை யாரும்
அவள் எனக் குறிப்பிட்டால்
என் செவியில் நாராசம் பாயும்
பெண் பூனை பெண் நாய்
ரெண்டையும் அவனென்றே
அழைப்பேன்
ஆனால் என் நண்பன்
ஒரு படி மேல்
மனிதப் பெண்டிரையும்
அவனென்றே அழைக்கிறான்

என்ன ஒரே கவிதை மழை என்றான்
ஹி ஹி என்றேன்
எழுதுவது நீ அல்ல நண்பா
அவன் எழுதுகிறான்
அவன் எழுதுகிறான்
என்றான் குறும்பு பொங்க