இவள் அமர்ந்த ஆசனம்

இதுவரை
நான்கு பெண்கள்
நான்காவதே கடைசியென
முடிவு
வாழ்வு அந்தியை
நெருங்கி விட்டதால் அல்ல
இவள் இறைவி
இவளை நினைந்த மனம்
இன்னொருத்தியைத் தழுவாது

நால்வருமே தேனீர்ப் பிரியர்கள்
நானோ காஃபி அடிக்ட்
வாழ்வின் குட்டி சாபங்களில்
இதுவுமொன்றெனக்
கொண்டேன்