ஐரோப்பிய சினிமா: சில வார்த்தைகள்

திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதுதான். என்னுடைய ரசனை மிகவும் தனித்துவமானது. ஐரோப்பிய சினிமா என்றதும் எல்லோரும் பெர்க்மன் என்பார்கள். நான் இந்த நிகழ்ச்சியில் பெர்க்மனை சேர்க்கப் போவதில்லை. ஜப்பானிய சினிமா என்றால் குரஸவா போல. இந்தியா என்றால் சத்யஜித் ரே போல. அந்த அடையாளங்களில் நான் ஒருபோதும் சிக்குவதில்லை. உங்களுக்கு பெர்க்மன் பற்றிக் கற்பிக்க யாரும் தேவையில்லை. ஏஐ போதும். ஆனால் நான் இப்போது சொல்லப் போகும் இயக்குனர் பற்றி நான் ஒருவன் தான் சொல்ல முடியும். பெயரைக் கேட்டுக் கொண்ட பிறகுதான் நீங்கள் ஏஐயிடம் செல்ல முடியும். பெயரை ஏஐ சொல்லாது. ருமானியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, ஃப்ரான்ஸில் வாழும், ஒரு புதிய சிந்தனைப் பள்ளியைத் தொடங்கிய சினிமா இயக்குனர் யார் என்று ஏஐயிடம் கேட்டேன். பதிலே இல்லை. அந்தப் பெயரை நான் தான் உங்களுக்கு சொல்ல முடியும். இஸிதோரே இஸு. அவருடைய venom and eternity பற்றித்தான் பேசப் போகிறேன். நாலரை மணி நேரப் படம். அதில் ஒரு இருபது நிமிடத்தைப் பார்க்கலாம். திருவண்ணாமலையிலேயே பேச இருந்தேன். நேரமின்மையினால் முடியவில்லை. இங்கே பேச முடியும். இப்படி பல திரைப்படங்கள் உள்ளன. வாருங்கள். சென்ற கட்டுரையில் விவரம் எழுதியிருக்கிறேன்.