ஒரே ஒரு ஐரோப்பிய சினிமா

ஒரு ஆயிரம் திரைப்படம் இருக்கும். ஐரோப்பிய சினிமா ஒரு கடல். அதில் ஒரே ஒரு திரைப்படத்தைக் கூறுங்கள் என்றால் கண்டக்டர் என்ற போலந்துத் திரைப்படத்தைக் கூறுவேன். 1980இல் அந்தத் திரைப்படம் வெளிவந்த போது தில்லியில் உள்ள போலந்து கலாச்சார மையத்தில் பார்த்தேன். அதற்குப் பிறகு பார்க்க வாய்க்கவில்லை. ஆனாலும் அதன் காட்சிகள், வசனங்கள் இன்னமும் ஞாபகம் உள்ளன. ஏனென்றால், அதில் வரும் ஆர்க்கெஸ்ட்ரா கண்டக்டரும் நானும் ஒன்றுதான். இத்தனைக்கும் படத்தைப் பார்க்கும்போது என் வயது இருபத்தேழுதான். கண்டக்டராக வரும் லஸோகிக்கு எழுபத்தைந்து வயதுக்கு மேல். இருந்தாலும் அவர் கதை என் கதை போலவே இருந்தது. அதாவது, நான் பார்த்தேயிராத, கற்பனையே செய்திராத என் எதிர்காலக் கதை.

அவன் விரல்களிலிருந்து பாய்கின்றன இசையின் அதிர்வுகள். நான் எழுதுகிறேன். அதுவே வித்தியாசம்.

ஐரோப்பிய சினிமா அறிமுக நிகழ்ச்சிக்கு இந்த ஒரு படத்தையாவது பார்த்து விட்டு வாருங்கள். அல்லது, நிகழ்ச்சி முடிந்து பிறகு சாவகாசமாகப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், பார்க்காமல் விடாதீர்கள்.