செக்ஷுவல் பாலிடிக்ஸ் பற்றிப் பேசாமல் ஐரோப்பிய சினிமாவுக்குள் நுழைய இயலாது என்பதால் பத்து மணியிலிருந்து பதினோரு மணி வரை அந்தப் பொருளில் சினிமா உதாரணங்களுடன் பேச இருக்கிறேன். எனவே முதல் ஒரு மணி நேரத்தைத் தவற விட்டு விடாதீர்கள். தாமதம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம். பாரிஸ் ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் காலை பத்து மணிக்கு மிஷல் ஃபூக்கொ லெக்சர் கொடுக்க இருக்கிறார் என்றால், ஏழு மணியிலிருந்தே மாணவர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுவார்களாம். முதலில் வருபவர்களுக்குத்தான் இருக்கை என்பதால் அப்படி ஏற்பாடு. ஒன்பது மணிக்குப் போனால் கூட இருக்கை கிடைக்காது.

ஆனால் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி அரங்கம் முந்நூறு பேர் கொள்ளளவு உள்ளது என்பதால் இடப்பற்றாக்குறை இல்லை. தாமதமாக வந்தால் எனக்குப் பிடிக்காது. அவ்வளவுதான். முன்கூட்டியே வந்து விடுங்கள்.