விதுரர் மகாபாரதத்தில் அமைதியின் சின்னமாகக் கருதப்படுபவர் விதுரர். எப்போதும் அளவோடு பேசி, தர்மத்தைப் பாதுகாக்க முயன்றவர். ஆனால், அது அவர் அநீதியை எதிர்க்கவில்லை என்று அர்த்தமல்ல. மாறாக, அவர் தன் ஞானத்தையும், வார்த்தையின் சக்தியையும்ப் பயன்படுத்தி பலமுறை அநீதியை எதிர்க்கிறார். கோபம் என்றால் உணர்ச்சிவசப்படாமல் கோர்த்து நிற்கும் உணர்வு, அது அவருக்கும் இருந்தது – குறிப்பாக துன்புறுத்தல்களின் போது. இதற்கு சில முக்கியச் சான்றுகள்:
அரச சபையில் துரியோதனன் திரௌபதியை அவமானப்படுத்தியபோது (வஸ்த்ராபஹரணம்), பீஷ்மர், திரிதராஷ்டிரர் போன்ற மூத்தவர்கள் அமைதியாக இருந்தார்கள். விதுரரும் விகர்ணனும் மட்டுமே அந்தக் கொடுஞ்செயலைக் கடுமையாக எதிர்த்தவர்கள். விதுரர் துரியோதனனையும் கர்ணனையும் கடுமையாக விமர்சித்து, அந்த அநீதியை “தர்மத்திற்கு எதிரானது” என்று கத்தினார். துரியோதனன் அவரை “அறிவில்லாதவன்” என்று அவமதித்தான். அந்த நிலையிலும் விதுரர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை; விட்டுக் கொடுக்கவில்லை.
லக்ஷகிரிஹா (மெழுகு மாளிகையில் தீ வைத்தது) போன்ற துரியோதனனின் சதிகளை விதுரர் பாண்டவர்களுக்கு முன்கூட்டியே எச்சரித்தார். யுதிஷ்டிரருக்கு மட்டும் புரியும் ரகசிய மொழியில் எழுதி அனுப்பி, அநீதியைத் தடுத்தார்.
திரிதராஷ்டிரருக்கு அநீதியைத் தவிர்க்குமாறு பலமுறை அறிவுறுத்தினார். கௌரவர்களின் தவறுகளை சரிசெய்யும்படி வலியுறுத்தினார், குறிப்பாக பாண்டவர்களுக்கு நேர்ந்த அநீதிகளை சுட்டிக்காட்டினார். குருக்ஷேத்திரப் போருக்கு முன், போரை எதிர்த்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்,
விதுர நீதி என்பது அமைதியாக இருப்பது அல்ல. கோபத்தைத் தவிர்த்து, ஞானத்தினால் அநீதியை எதிர்க்கும் அமைதி. (என் கதையில் வரும் நாயகி ஐரோப்பியப் பயணம் செய்து கொண்டிருந்த காலத்தில் நான் அந்தக் கதையை எழுதவில்லை என்பதை நினைவு கூருங்கள்.)
தர்மத்தின் அவதாரம் விதுரர். அநீதியைக் கண்டு மௌனமாக இருப்பது பாவம் என அவர் நம்பினார். நான் ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளனாக இருந்தும், செவ்விலக்கியங்களிலிருந்து என் வாழ்வியல் ஞானத்தையும் இலக்கிய அறிவையும் எடுத்துக் கொள்கிறேன். பின்பற்றுகிறேன்…