கற்பகம் சாந்தகுமாரைத் தெரியுமா? (சிறுகதை)

ஒரு நண்பர் இன்று என்னிடம் “உங்களுக்கு கற்பகம் சாந்தகுமாரைத் தெரியுமா?” என்று கேட்டார். தெரியும் என்றேன். அவரை எனக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தெரியும் என்று மேலதிகத் தகவலையும் சொன்னேன். பிறகு அவர் பற்றிய மற்ற விவரங்களையும் சொன்னேன். “ஓ, அவர் இலக்கிய உலகில்தான் இருக்கிறாரா?” என்று கேட்டார் நண்பர்.

நண்பருக்குத் தமிழ் இலக்கிய உலகம் பற்றி எதுவும் தெரியாது. அவர் முற்றிலும் ஆங்கிலத்தில் படிப்பவர். ஆங்கிலத்தில் எழுதுபவர். அதனால் அவருக்குக் கற்பகம் சாந்தகுமாரின் பெயர் எப்படித் தெரிந்திருக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

”உங்களுக்கு அவரை எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.

”ஆஹா, முதல் முறையாக சாரு கேள்வி கேட்டு விட்டார்!!!” என்று ஆர்ப்பரித்தார் நண்பர்.

ஆம், நான் கேள்வியே கேட்பதில்லை. காரணம், கேள்வி கேட்டால் பதிலுக்கு பதில் வராது. செருப்படிதான் வரும். அதனால்தான் நான் கேள்வியே கேட்பதில்லை. இன்று முதல் முறையாக ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு எனக்குக் கிடைத்த பதில் இது:

“சொல்ல மாட்டேன்.”

இதுதான் நண்பரின் பதில்!!!

அதோடு விட்டு விட்டேன்.

எது பற்றியும் ஆச்சரியம் அடையக் கூடாது. எது பற்றியும் கேள்வி கேட்கக் கூடாது. ஞானம்!!!

ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பே வடிவமான ஒருவர் அந்த நண்பர். அவர் எப்படி சம்பந்தமே இல்லாமல் என்னை அழைத்து என் ஆசன வாயில் கத்தியைச் சொருகுகிறார்? வள்ளலாரே ஆனாலும் என்னோடு பழகினால் என்னைக் கத்தியால் குத்துவார் என்று பலமுறை எழுதியிருக்கிறேன். என் நண்பரும் வள்ளலாரைப் போன்றவர்தான். ஆனாலும் அவருக்கு ஏன் என்னைத் துன்புறுத்த வேண்டும் என்று தோன்றுகிறது? ஒரு எறும்பு அது பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. அதை ஏன் ஐயா காலால் நசுக்கிக் கொல்கிறீர்கள்? சாதாரண மனிதன் அதைச் செய்கிறான் என்றால் அது சாதாரண மனிதரின் இயல்பு என்று கடந்து போய் விடுவேன். ஆனால் நீங்கள் வள்ளலார். நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? அடுத்தவரை ஹிம்சித்து அதில் இன்பம் காணும் குணம் வள்ளலாரிடமும் இருக்குமா? உங்களுடைய “சொல்ல மாட்டேன்” என்ற பதில் அடுத்தவனின் முகத்தில் காறி உமிழ்வது போன்றது என்பது உங்களுக்கு ஏன் தெரியாமலே போகிறது? நானா உரையாடலை ஆரம்பித்தேன்? உரையாடலை ஆரம்பிக்கும் உங்களுக்கு உரையாடலின் மீது மூத்திரத்தை அடித்துக் காலி பண்ணுவதன் வன்முறை புரியவில்லையா?

நண்பரிடம் கேட்டால் சொல்வதும் சொல்லாததும் என் சுதந்திரம் என்பார்.

நாம் பாட்டுக்கு சிவனே என்று நடந்து போய்க் கொண்டிருக்கிறோம். எதிரே வருபவன் நம் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு எதுவுமே நடக்காதது போல் கடந்து போகிறான். அப்படித்தான் இருந்தது அவர் சொன்ன “சொல்ல மாட்டேன்” என்ற பதிலும்.

அற்ப விஷயம். என் வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் ரகசியங்களின் பக்கம் வந்து எட்டிப் பார்க்கும் அற்பச் செயலை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். ஆனால் உங்கள் ரகசியம் என் ஆசனவாயில் இரும்புக் கம்பியாகக் குத்திக் குடையக் கூடாது. நான் என்ன கேட்டேன்? மாதத்தில் எத்தனை முறை கரமைதுனம் செய்கிறீர்கள் என்றா கேட்டேன்? நீங்கள் கேட்ட கேள்வியைத் தொடர்ந்து ஒரு கேள்வி கேட்டேன். அவ்வளவுதானே?

இதில் இன்னொரு முக்கியமான விஷயம். அவர் மட்டும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி என் ஆசன வாயில் கொள்ளிக்கட்டையைச் சொருகாமல் இருந்திருந்தால் கற்பகம் சாந்தகுமார் என் வாழ்வில் எனக்குச் செய்த கொடூரமான அநீதிகளைப் பற்றி விளக்கியிருப்பேன். என் வாழ்க்கை வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கும் அந்த நண்பருக்கு என் வாழ்வின் ஆரம்பப் பகுதியில் நடந்த பல சங்கதிகள் தெரிந்திருக்கும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் விளக்கியிருக்கக் கூடிய சம்பவங்கள் அவை. எல்லாம் காலி. எனக்குத்தான் நஷ்டம். என் வாழ்வின் அனைத்துப் பகுதிகளும் தெரிந்த கொக்கரக்கோவிடம் கூட சொல்லாத பகுதிகள் அவை. மறைக்க வேண்டும் என்று மறைத்ததில்லை. கற்பகம் சாந்தகுமார் பற்றி கொக்கரக்கோ கேட்டதில்லை. நான் சொன்னதில்லை. அவ்வளவுதான். எல்லாம் நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய கருப்புப் பக்கங்கள். இதுவரை என் நண்பர்கள் யாரிடமும் சொல்லாத, எழுத்திலும் எழுதாத கருப்புப் பக்கங்கள்.

”சொல்ல மாட்டேன் என்று சொன்னது என் குழந்தைத்தனம். என்னைக் குழந்தையாக பாவியுங்கள்” என்பார் நண்பர்.

பாவிக்கிறேன். ஆனால் எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா?

என்னோடு பழகும் பலரிடமும் இந்த குணாம்சத்தைக் காண்கிறேன். ஒருநாள் நான் மதிய உணவுக்காக ராஜா அண்ணாமலைபுரம் பக்கம் சென்றேன். அங்கேதான் என் நெருங்கிய நண்பர் வசிக்கிறார். தனியாகச் சாப்பிடுவதை விட அவரோடு சாப்பிடலாமே என்று ஆசைப்பட்டேன். ஃபோன் போட்டேன். “சாரு, நான் வெளியே இருக்கிறேன், வர இயலாது” என்றார். விட்டு விட்டேன். ஆனால் வெளியே இருக்கிறேன் என்றால் என்ன அர்த்தம்?

இன்னொருத்தர். இன்னும் மேலே. சாரு, நான் வெளியூர் போகிறேன், ஒரு வாரத்துக்கு வாக்கிங் வர இயலாது.

என்னது, வெளியூரா? அப்படி ஒரு ஊர் இருக்கிறதா? வெளியூரின் பெயரைக் கூட சொல்ல இயலாதா? ங்கோத்தா, அப்படி என்னடா ரகசியப் புண்டை? இது என்ன, ராணுவ ரகசியமா? நானும் நீயும் என்ன இந்தியா பாகிஸ்தான் மாதிரி எல்லைத் தகராறா செய்து கொண்டிருக்கிறோம்?

ஊரிலிருந்து திரும்பி வந்து “சாரு, ஒரு வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் போயிருந்தேன்” என்பார்.

“அதை ஏண்டா லூசுக் கூதி வெளியூர் என்று சொன்னாய்?” என்பதை “அதை ஏங்க வெளியூர்னு சொன்னீங்க?” என்று மாற்றிக் கேட்பேன். ”அப்படியே பழகிப் போச்சு சாரு.” இதுதான் பதில்.

இன்று என்னிடம் கற்பகம் சாந்தகுமாரின் பெயர் தனக்கு எப்படித் தெரியும் என்ற விஷயத்தைச் சொல்ல மாட்டேன் என்று சொன்ன நண்பருக்கு அவருக்கான தர்க்கமும் நியாயமும் இருக்கும். ஆனால் என்னிடம் ஆர்வத்தைத் தூண்டி விட்டு விட்டு ங்கோத்தா சாவு என்று சொல்லிக் கடந்து போவது எப்படி நியாயமாகும்? இனிமேல் நான் சாகும் வரை “இந்த நண்பருக்குக் கற்பகம் சாந்தகுமாரின் பெயர் எப்படித் தெரிந்திருக்க முடியும்?” என்ற கேள்வி துளைத்துக் கொண்டே இருக்கும். நான் சாகும் தருணத்தில்கூட அந்த நண்பர் என் அருகில் இருக்க நேர்ந்தால் இந்தக் கேள்வியைத்தான் கேட்பேன்.

“உங்களுக்குக் கற்பகம் சாந்தகுமாரின் பெயர் எப்படித் தெரியும்?”