கார்டியாலஜிஸ்டுகளுக்கு இனி வேலை இல்லை!

ஒரு மாதத்துக்கு முன்பு வரை ஆஞ்ஜைனா ஆஞ்ஜைனா என்று அனத்திக் கொண்டிருந்தேன் அல்லவா?  இப்போது ஜிம்முக்குப் போகும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தது எப்படி?  கடந்த ஒரு மாதமாக ஆஞ்ஜைனா இல்லை.  இனியும் வராது. என் இதயத்தின் ரத்தக் குழாய்களில் 50 சதவிகத அடைப்பு இருந்தது.  அதனால் சுவாசிக்க ஆக்ஸிஜன் குறையும் போது நெஞ்சு வலி ஏற்படும்.  பத்தே பத்து அடி கூட நடக்க முடியாதபடி வலிக்கும்.  காலையில் வலிக்காது.  மாலையில் வலிக்கும்.  இதற்காக ஒரு கை மருந்து … Read more

நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்…

என்னைத் தெரியாதவர்கள், என்னை அறியாதவர்கள் என்னைத் திட்டினால் எனக்குக் கோபம் வருவதில்லை. உயர்ந்த இடத்தில் இருப்போர் அப்படித்தான் இருக்க வேண்டும். நன்னிலம் நடராசன், வண்ணை ஸ்டெல்லா, வெற்றி கொண்டான் போன்றவர்கள் எதிர்க் கட்சித் தலைவர்களை – குறிப்பாக ஜெயலலிதாவை – திட்டிப் பேசுவதைக் கேட்டு வளர்ந்தவன் நான். தீப்பொறி ஆறுமுகம் பேச்சை மட்டும் நேரில் கேட்டதில்லை. ஒரு பெண் அரசியல்வாதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு, இடையிலேயே வேறோர் விஷயத்துக்குத் தாவி பேசி விட்டு வந்து, ஒரு … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் – முன்பதிவுத் திட்டம்

நேற்றிலிருந்து ஸ்ரீராம் ஒரே குஷியாக இருக்கிறார். என்ன காரணம் என்றால், ’எங்கே உன் கடவுள்?’ என்று என்னுடைய கட்டுரைத் தொகுப்பு ஒன்று உள்ளது. சோ இருந்த போது துக்ளக் பத்திரிகையில் தொடராக வந்தது. கிழக்கு பதிப்பகம். அது கிண்டிலில் வந்துள்ளது. ஏதோ சலுகை விலைத் திட்டத்தில் இப்போது ஒன்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதன் கிண்டில் விற்பனை இப்போது ஏதோ இந்தியாவின் டாப் புத்தகங்களையெல்லாம், cult புத்தகங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு முதல் இடத்தில் இருக்கிறதாம். இதை நீங்கள் … Read more

காயத்ரியின் பிறந்த நாளான இன்று…

காயத்ரியின் பிறந்த நாளான இன்று இந்தக் கட்டுரையை மீள்பிரசுரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் மிகப் பெரிய உயரத்திலிருந்து விழுந்த போது அந்த அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.  அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும்.  இந்த இரண்டும் நிகழாமல் என்னைக் காப்பாற்றியவர் காயத்ரி.  அதுவும் அப்போது அவர் என்னைச் சந்தித்து ஒரு வாரம்தான் இருக்கும்.  சே, நீ இப்படிப்பட்ட ஆளா என்று என்னை விட்டு அகன்று விடாமல் என்னை நம்பினார். நான் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – 3 முன்வெளியீட்டுத் திட்டம்

பழுப்பு நிறப் பக்கங்கள் தினமணி இணைய இதழில் தொடராக வந்து கொண்டிருந்த போது அது பற்றி எழுத்து காலத்து மூத்த கவிஞர் எஸ். வைதீஸ்வரன் அது பற்றி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அன்புள்ள சாரு… இந்த வாரம் தினமணியில் பழுப்பு நிறப் பக்கங்கள் தொடரில் ‘கு.ப.ரா. 3’ படித்தேன். கு.ப.ரா.வைப் பற்றி இதுவரை கவனிக்கப்படாத அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட பல ஆழமான தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. வெறும் அதிர்ச்சிகளைத் தூண்டும் … Read more