பூச்சி – 38

புவி என் நெடுநாள் தோழி.  அவர் என்னுடைய சமீபத்திய பூச்சி கட்டுரைகளைப் படித்து விட்டு “நீங்கள் ரொம்பவும் மென்மையாகி விட்டீர்கள்.  ரெண்டு பத்திகளைத் தாண்டிய பிறகுதான் நீங்கள் அவரைப் பாராட்டவில்லை, விமர்சிக்கிறீர்கள் என்றே தெரிய வந்தது.  முன்பெல்லாம் முதல் வாக்கியத்திலேயே சொருகி எடுத்தால் குடல் வெளியே சரிந்து விடும்.  அதோடும் விடாமல் அந்தக் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு ஒரு ருத்ர தாண்டவம் வேறு.  பார்க்க ஜோராக இருக்கும்.  அந்த சாரு இப்போது இல்லை.  அது … Read more

பூச்சி – 37

கறுப்பன் எழுந்து கொள்ள முயற்சித்தான்.  ம்ஹும்.  முடியவில்லை.  அச்சமும் நடுக்கமும் அவமானமும் அவனைத் தரையிலேயே ஆணி அடித்தாற்போல் வைத்து அழுத்தியது.  பிறகு அந்தத் தேன்குரலைக் கேட்டான். “த்ரிஸ்த்தான்…” இந்தக் கோவிலுக்கு வெளியே வேறோர் காலத்தில் இதேபோல் அவன் அழைக்கப்பட்டிருக்கிறான்.  அப்படியானால் இது கனவு அல்ல; நனவுதான்.  சீமாட்டிதான் வந்திருக்கிறாள்.  தன் அருகே தெரியும் அவள் கால்கள் உண்மைதான்.  அவன் பதில் சொல்லியாக வேண்டும்; அல்லது சாக வேண்டும்.  அவன் பேசியே ஆக வேண்டும்.  அவனிடம் வந்து சேர்ந்த … Read more

பூச்சி – 36

க்ரனாடா நாவலை எழுதியவர் ராத்வா அஷூர்.  இடதுசாரி.  கெய்ரோவில் 1946-இல் பிறந்தார்.  அதே ஆண்டில்தான் அந்நகரின் புகழ்பெற்ற அப்பாஸ் பாலத்தில் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பிரிட்டிஷ் ராணுவம் துப்பாக்கியால் சுட்ட சம்பவமும் நடந்தது.  ஒரு பக்கம் நைல் நதி – எதிர்ப் பக்கம் துப்பாக்கிச் சூடு என்ற நிலையில் அன்றைய தினம் பல நூறு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  சிறு வயதிலிருந்தே கலக மனோபாவம் கொண்டிருந்த ராத்வா அஷூர் தன் 14-ஆம் வயதில் … Read more

பூச்சி – 35

சமீபத்திய என் கட்டுரைகளைப் படித்து சிலருக்கு சாரு இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்து விட்டாரோ என்று தோன்றலாம்.  ஒவ்வொரு பிரச்சினையையும் எப்படி அணுக வேண்டுமோ அப்படி அணுகுவதே என் வழக்கம்.  மற்றபடி நான் எக்காலத்திலும் எந்த மதத்துக்கும் சார்பானவன் அல்ல.  இஸ்லாம் என்றால் இஸ்லாத்துக்கு வெளியே உள்ள சூஃபிகளின் மாணவன் நான்.  கிறித்தவம் என்றால், அங்கே நான் OPUS DEI போன்ற தீவிரவாதிகளுக்கு எதிரானவன்; John of the Cross-இன் சீடன்.  இந்து மதம் என்றால் அங்கே நான் … Read more

பூச்சி – 34

கணேஷ் அன்புவின் கடிதம். கடிதத்தின் ஆரம்பத்தில் எனக்கு ஒரு பாராட்டு வார்த்தை உள்ளது.  ”உங்களது அர்ப்பணிப்பும், மெனக்கெடலும் மேலும் மேலும்  என்னை வியக்க வைக்கிறது என்று சொல்லிவிட்டே மேற்கொண்டு தொடர்கிறேன்.”   ஏன் ஐயா, யாரை யார் பாராட்டுவது?  நட்பின் காரணமாகத் தோள் மீது கை போட்டால் இருவரும் சமம் என நினைத்துக் கொள்வதா?  அமார்த்யா சென்னிடம் போய் “உங்கள் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைக்கிறது” என்று சொல்ல முடியுமா?  சொல்லலாம்.  சொல்பவர் அமார்த்யா சென்னை விடப் பெரிய … Read more

பூச்சி – 33

டியர் சாரு,  உங்களது அர்ப்பணிப்பும், மெனக்கெடலும் மேலும் மேலும்  என்னை வியக்க வைக்கிறது என்று சொல்லிவிட்டே மேற்கொண்டு தொடர்கிறேன். எனது ஐயங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும், உங்களது பார்வையில் நானும் கொஞ்சம் தெளிவுறுவேன் என்ற அடிப்படையிலேயே அவற்றை எழுப்பினேன். என் போன்ற பல ஆயிரம் பேருக்கும், இனி வரும் காலங்களில் பூச்சி தொடரை வாசிப்போருக்கும் உங்களது பதில்கள் பொக்கிஷமாக இருக்கக்கூடும் என்பதில் எனக்கும் கொஞ்சம் பெருமிதமே. நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் எனக்குத் தெளிவாக புரிகிறது சாரு. … Read more