நூறு சிம்மாசனங்கள் பற்றி சாரு
ஜெயமோகனின் நூறு சிம்மாசனங்கள் பற்றி கார்ல் மார்க்ஸின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சாரு விரிவாகப் பேசியிருந்தார். இணைப்பு கீழே:
ஜெயமோகனின் நூறு சிம்மாசனங்கள் பற்றி கார்ல் மார்க்ஸின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சாரு விரிவாகப் பேசியிருந்தார். இணைப்பு கீழே:
சென்ற அத்தியாயத்தில் ஒரு முக்கிய விபரம் விடுபட்டு விட்டது. மீன் கடையில் எனக்கு முன்னே நின்றவர்களில் மூன்று பேர் Dunzo ஆட்கள். ஆக, மீன் கடையின் டோர் டெலிவரி போக டன்ஸோ மூலமாகவும் மீனை வீட்டுக்குத் தருவித்துக் கொள்ளலாம். இரண்டு வாரத்துக்கு முன் எனக்கு வேண்டிய மருந்துகள் தேவைப்பட்ட போது, என் வீட்டை அடுத்து உள்ள அப்பல்லோ ஃபார்மஸியில் சில மருந்துகள் இல்லை எனக் கைவிரித்து விட்ட போது, மீனம்பாக்கத்திலிருந்து ஒரு வாசகி எனக்கான மருந்துகளை டன்ஸோ … Read more
சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் என் பிரதான மாணவியை அழைத்து, “இதெல்லாம் உனக்கே நல்லா இருக்கா? ஒரு முக்கியமான பொறுப்பில் இருக்கும் நீ இப்படிப் பொறுப்பில்லாமல் (ம்ஹும், நினைவில் வந்த ‘பொறுப்பில்லாமல்’ என்ற வார்த்தையை அப்படியே ரத்து செய்து விட்டு வேறொரு வார்த்தையைப் போட்டு ரொப்பினேன்) இப்படி விளையாட்டுத்தனமாக நடந்து கொள்ளலாமா? இது சம்பந்தமாக திரு. கிருஷ்ணனும் இதே மாதிரிதான் நினைக்கிறார். நேற்று இது பற்றி இருவரும் ஒரு மணி நேரம் புலம்பிக் கொண்டிருந்தோம்” … Read more
Oh my ghaad… நிர்மல் கடிதம் மூன்று பகுதிகளாக வாட்ஸப்பில் வந்தது. அதில் முதல் பகுதியைக் கட்டுரையில் இணைக்க மறந்து போனேன். இதோ அது: ”சாரு வெறும் பூச்சி என்ற தலைப்பு நன்றாக இல்லை. குறைந்த பட்சம் ஒரு துணைத் தலைப்பாவது சேருங்கள். சமீபத்திய பூச்சி பற்றிய என் கருத்து: உயிரினங்களின் மீதான அன்பு என்ற விஷயம் சைவம் X அசைவம் என்ற சர்ச்சைக்குள் போய் முடிந்துவிடும். அதற்குள் போகாமல் சாரு தப்பிப்பார் என எதிர்பார்க்கிறேன். ஜீவகாரூண்யம் … Read more
ஓ, இந்தப் பசு விஷயத்திலிருந்து அடுத்த அடி வைக்கலாம் என்று பார்த்தால் முடிய மாட்டேன் என்கிறது. நேற்று சொல்ல மறந்த விஷயம்: பல ஆண்டுகளாக அன்பு சிக்கன் கடைக்குப் போவதை நிறுத்தி விட்டேன். அன்பு பற்றி எக்ஸைலில் எழுதியிருக்கிறேன். கோழி விற்றுக் கோடீஸ்வரன் ஆனவர். சில பல ஆண்டுகளுக்கு முன்பு அன்பு ஒரு புதிய இடத்திலிருந்து விற்பதற்காகக் கோழி வாங்கியிருக்கிறார். மற்ற கறியெல்லாம் ஜவ்வு மாதிரி இழுக்கும். இல்லாவிட்டால் நார் நாராக வரும். தமிழ்நாடு பூராவும் சிக்கன் … Read more
கணேஷின் கேள்விகள் சாதாரணமாகப் புறக்கணித்து விடக் கூடியவை அல்ல. அதனால்தான் இத்தனை விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இதே கேள்விகளை, சந்தேகங்களைத் தாங்களும் கொண்டிருப்பதாகப் பலரும் எனக்கு எழுதியிருக்கின்றனர். ”ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மாடுகளைக் கொடூரமாக கொல்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு உயிரைக் கொல்வதே கொடூரம்தான்! மனிதன் சாப்பிடுவதற்காக ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் இறால், புறா, காடை, இன்னபிற என அனைத்தையுமே கொல்லத்தானே செய்கிறான்? கொல்வதில், கொடூரமாகக் கொல்வது அன்பாகக் கொல்வது என தனித்தனியாக ஏதேனும் இருக்கிறதா?” … Read more