மகாபாரத அணி Vs காமரூப அணி

இன்றைய தினம் அதிகாலை நான்கு மணி அளவில் ஒரு கனா.  கொடுங்கனா என்றும் சொல்லலாம்.  வேறு மாதிரியும் காணலாம்.  எப்படி அதிகாலை என்று தெரிந்ததென்றால், கனா முடிந்ததும் விழிப்பு வந்து விட்டது.  பார்த்தால் மணி நாலரை.  பலவிதமான வினோத ரசக் கலவை மனநிலையுடன் நடைப்பயிற்சி கிளம்பி விட்டேன். விஷயம் இவ்வளவுதான்.  எழுத்தாளர் சங்கத் தேர்தல் நடக்கிறது.  ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் எதிரெதிர் அணியில் நிற்கிறார்கள். மகாபாரத அணி Vs காமரூப அணி.  நாஞ்சில் நாடன், வெங்கட் சாமிநாதன், … Read more

பத்து கேள்விகள் : அழகிய சிங்கர் எடுத்த நேர்காணல்

நேற்றைய முன் தினம் அழகிய சிங்கரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன்.  அப்போது அவர் என்னிடம் பத்து கேள்விகள் கேட்டு என் பதிலை விடியோ எடுத்தார்.  அதன் இணைப்பு கீழே.  இதே போல் அசோகமித்திரனிடம் பத்து கேள்விகள் கேட்டு விடியோ எடுத்திருக்கிறார்.  அசோகமித்திரனை தி.நகரில் அவரது புதல்வர் இல்லத்தில் சந்தித்தேன்.  நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  அது ஒரு பெரிய கதை.  பிறகு சொல்கிறேன்.  இப்போதைக்கு நேர்காணல்.

படித்ததில் பிடித்தது…

தி இந்துவில் வெளிவரும் நடுப்பக்கக் கட்டுரைகளைத் தவறாமல் படித்து வருகிறேன்.  புனைகதைகள் தவிர தமிழில் நான் படிக்கும் கனமான விஷயம் இந்து கட்டுரைகள்தான்.  மற்றபடி வணிக நோக்குடன் நடத்தப்படும் வார இதழ்களைப் படிக்க நேரம் இல்லை.   இரண்டு தினங்கள் முன்பு இந்துவில் வந்த அரவிந்தனின் கட்டுரை முக்கியமானது.  இன்றைய தினம் வெளிவந்துள்ள சமஸின் கட்டுரை மிக மிக முக்கியமானது.  நான் மாடுகளை தெய்வமாகத் தொழுபவன்.  ஒவ்வொரு பசுவும் எனக்கு தெய்வம்.  ஆனால் நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடும் … Read more

ஜனவரி 9 புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக…

நண்பர்களே…  ஜனவரி 9-ஆம் தேதி என்னுடைய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறும்.  அந்திமழையில் வெளிவந்த அறம் பொருள் இன்பம் என்ற கேள்வி பதில் தொகுப்பைப் படித்துப் பார்த்தேன்.  அருமையாக வந்திருக்கிறது என்று சொன்னால் தற்பெருமை பேசுகிறேன் என்பார்கள்.  என் நெருங்கிய நண்பர்களே அடிக்கடி புகார் சொல்கிறார்கள், என் தற்பெருமைப் பேச்சுக்கள் பற்றி.  என்ன கருமமோ தெரியவில்லை, எனக்கு அது தற்பெருமையாகவே தெரியவில்லை.  கால்சராய் எடுக்கப் போகும் போது  உங்கள் இடுப்பு அளவு என்ன என்று கேட்கிறார்கள் அல்லவா, … Read more