ஒவ்வொரு வாரமும் சினிமா விமர்சனம்

MADRAS CENTRAL இணைய தளத்திலிருந்து yosee என்ற நிகழ்ச்சி மூலம் வாராவாரம் ஒரு தமிழ் சினிமாவை மதிப்பீடு செய்ய இருக்கிறேன்.  முதல் படம் விவேகம்.  நாளை மறுநாள் முதல் காட்சி முடிந்ததும் என் விமர்சனம் மெட்ராஸ் செண்ட்ரல் தளத்தில் வரும்.  விமர்சனத்தில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இருக்காது.  மற்றபடி என்ன இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

தரமணி : தமிழின் முதல் பெண்ணியப் படம்

தமிழ் சினிமாவில் அன்பு அன்பு என்று சொல்லிக் கொண்டு ஒரு கோஷ்டி அலைகிறது.  அந்த கோஷ்டியால் இதுவரை ஒரு நல்ல சினிமா கூட கொடுக்க முடியவில்லை.  அந்த கோஷ்டியின் செயல்வீரர் ராஜு முருகன்.  தலைவர் ராதா மோகன்.  (பார்க்கவும்: பிருந்தாவனம்)  கற்றது தமிழ் படத்தின் மூலம் அந்தப் படத்தின் பெயரே இனிஷியலாகவும் மாறி விட்ட ராமின் தங்க மீன்கள் படத்தைப் பார்த்த போது அவரும் இந்த ‘அன்பு’ கோஷ்டியைச் சேர்ந்தவர் என்றே முடிவு செய்து விட்டேன்.  அந்தப் … Read more

ஒரு மன்னிப்பு

கமல் காயத்ரியிடம் வருத்தப்பட்டார். நம்மிடமும் தான். நானும் (கமல்) நீங்களும் ஒரே சாதி என்பதால்தான் உங்கள் மீது நான் கனிவாக இருந்ததாக மக்களில் சிலர் சொன்னார்கள். அதுதான் மிகப் பெரிய கெட்ட வார்த்தை. கமல் காயத்ரியிடம் ஏன் இத்தனை நாள் இவ்வளவு கனிவு காட்டினார் என்று மக்களுக்குப் புரியவில்லை. எனக்கும் தான். வேறு காரணமே தெரியாத போது இதை எடுத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை. அப்படி நான் சொல்லியிருந்தால் – அதாவது சாதி பற்றி – … Read more

புதிய தரமணியும் பழைய ஆல்பர்ட் தியேட்டரும் : ஷாலின்

தரமணி பற்றி முகநூலில் ஷாலின் எழுதிய இந்தச் சிறிய குறிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிய தரமணியும் பழைய ஆல்பர்ட் தியேட்டரும் ஆண்டு 1990 . எனக்கு 7 வயது . பள்ளியில் நடக்கும் ஸ்போர்ட்ஸ் டே வை ஒன்றுக்கும் உதவாது என்று புறக்கணித்துவிட்டு என் அன்பார்ந்த பெற்றோர்கள் என்னை மைக்கேல் மதன காமராஜன் படத்திற்கு அழைத்து சென்றார்கள் . அன்றைய மதிய காட்சியை கண்டுகளித்த இடம் எழும்பூரில் புகழ்பெற்ற ஆல்பர்ட் தியேட்டர் .முட்டை போண்டாவும் ,எனக்கு … Read more

எழுத்தாளனின் தனிமை – 2

நேற்று ஒரு ஆவேசமான தருணத்தில் இதன் முதல் பகுதியைத் தட்டினேன்.  சில விபரங்கள் விடுபட்டு விட்டன.  கார்ல் மார்க்ஸ் பற்றி எஸ்.ரா. பேசிய கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பேச்சை நீங்கள் ஷ்ருதி டிவி இணைப்பில் காணலாம்.  இரண்டு மணி நேரமும் அவர் தண்ணீர் கூட அருந்தாததை கவனித்தேன்.  அது போகட்டும்.  ஆனால் இப்படி ஒரு பேச்சை அவர் ஒரு வாரத்தில் தயாரித்திருக்க முடியாது.  வாழ்நாள் பூராவும் கார்ல் மார்க்ஸ் அவர் குருதியில் ஓடியிருக்க வேண்டும்.  வாழ்நாள் … Read more