விவேகம் விமர்சனம் தொடர்பாக தி இந்து

தி இந்து வெளியான முதல் நாளிலிருந்து அதன் வாசகனாக, அதைப் பலரிடமும் சிபாரிசு செய்பவனாக இருந்து வருகிறேன்.  காரணம், தமிழ்ச் சமூகம் அறியாத, அறிய விரும்பாத தமிழ் எழுத்தாளர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறது தி இந்து என்பதால்.  மேலும் அதில் வரும் நடுப்பக்கக் கட்டுரைகள் சர்வதேசத் தரத்தில் உள்ளன.  இந்த நிலையில் என்னுடைய விவேகம் விமர்சனம் தொடர்பாக எனக்குக் கொலை மிரட்டலும் மற்ற பல வசைகளும் வந்ததால், அதுவும் அந்த நபர்கள் … Read more

பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்

மனுஷ்ய புத்திரனின் சமீபத்திய கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் இனிதே நடந்து முடிந்தது.  பேசி முடித்த போது மாலை ஐந்து மணி.  அந்தப் பேச்சின் காணொளியை நள்ளிரவே இணையதளத்தில் பதிவேற்றி விட்டார் ஷ்ருதி டிவி கபிலன்.  இன்றைய தமிழ் இலக்கியத்துக்கு அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியதாகும்.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப் பணியை அவர் செய்து வருகிறார்.