மொழி வழி
நினைப்பதைச் சொல்ல மொழி நானும் சொல்லி வந்தேன் நினைப்பதையே எழுதி வந்தேன் அப்படித்தான் நம்பி வந்தேன் எல்லோரும் என்னை நிர்வாண மனிதன் என்றார்கள் ஆனால் உன்னிடம் வார்த்தைகள் உறைந்த பனியாய் நிற்கின்றன எல்லோரிடமும்தான்
நினைப்பதைச் சொல்ல மொழி நானும் சொல்லி வந்தேன் நினைப்பதையே எழுதி வந்தேன் அப்படித்தான் நம்பி வந்தேன் எல்லோரும் என்னை நிர்வாண மனிதன் என்றார்கள் ஆனால் உன்னிடம் வார்த்தைகள் உறைந்த பனியாய் நிற்கின்றன எல்லோரிடமும்தான்
என்னிடம் உரையாடும் மைனா பட்சியினம்தானென்றாலும் நல்ஞானமும் நேர்கொண்ட பார்வையுமுண்டு இன்று வந்து கேட்டது: ’பெண்களுக்கேன் பிராணிகளைப் பிடிக்கிறது?’ ஆயுள் முழுதும் பெண்களுடனே இருந்தும் அந்த வேற்றுக்கிரக ஜீவிகளைப் புரிந்து கொள்ள முடிந்ததில்லை யென்றேன் ’அது ஒன்றுமில்லை பிராணிகள் கேள்வி கேட்பதில்லை’ யோசிக்கத் தொடங்கிய என்னை இடைமறித்து ‘நீயும் பிராணிதான்’ எனச் சொல்லிப் பறந்தது
பூனை நாய்களின் பெண்ணினத்தை யாரும் அவள் எனக் குறிப்பிட்டால் என் செவியில் நாராசம் பாயும் பெண் பூனை பெண் நாய் ரெண்டையும் அவனென்றே அழைப்பேன் ஆனால் என் நண்பன் ஒரு படி மேல் மனிதப் பெண்டிரையும் அவனென்றே அழைக்கிறான் என்ன ஒரே கவிதை மழை என்றான் ஹி ஹி என்றேன் எழுதுவது நீ அல்ல நண்பா அவன் எழுதுகிறான் அவன் எழுதுகிறான் என்றான் குறும்பு பொங்க
கோழி கூவுகிறதுகண்ணீர் பெருக்கெடுக்கிறது
இன்று அராத்துவின் பிறந்த நாள். அதை முன்னிட்டு அவர் நமக்குத் தந்திருப்பது Minxie-யும் அதன் தமிழ் வடிவமான குட்டிமா-வும். பிறந்த நாள் பரிசாக நாம் அவருக்குத் தருவது இந்த நாவல்களை வாங்குவதே. இணைப்பு கீழே: India https://amzn.in/d/91mKkW9 USA https://a.co/d/2On7FJL UK https://amzn.eu/d/8GrhXj5
எதேச்சையாய் சந்தித்த தோழி, என்ன செய்கிறாய் என்றாள். காதல் செய்கிறேன், காதல் கவிதைகள் எழுதுகிறேன் என்றேன் சற்றே நாடகத்தனமாக கண்களில் பளபளப்புடன். எப்போதும் நீ இப்படித்தான் இத்தனை வயதிலும், இன்னும் க்ளிஷேக்களில் விளையாடுகிறாய். ’எப்போதும் இப்படித்தான் நான் என்ன சொன்னாலும் நீ மட்டுமல்ல, யாரும் நம்புவதில்லை அதனாலே இப்போது சற்று தயக்கத்தோடே சொல்கிறேன்… கொஞ்ச காலம் நான் நிலவுடன் டேட்டிங் செய்தேன்.’ அவள் கண்கள் விரிந்தன ’நிலவு! இது என்ன உன் புதிய hipster கவிதையா?’ ’இல்லை, … Read more