நன்றி மனுஷ்ய புத்திரன்

என்னுடைய கவிதைத் தொகுதியான ஸ்மாஷன் தாராவுக்கு நேற்று நள்ளிரவு மனுஷ்ய புத்திரன் எழுதிய முன்னுரை கிடைத்தது. நான் அதை அதிகாலையில் படித்தேன். ஹமீது அவர் பணி புரிந்து கொண்டிருந்த பதிப்பகத்திலிருந்து பிரிந்து வந்திருக்காவிட்டால் ஸீரோ டிகிரி பதிப்பகம் வரும் வரை நான் என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொண்டிருந்திருப்பேன். முதல் முதலாக, துணிச்சலாக என் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்தவர் ஹமீது. என்னுடன் ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பர்கள் கூட முன் வர மறுத்த செயல் அது. … Read more

சாருவின் மொழி: போகன் சங்கர்

தமிழ் இலக்கியத்துக்கு சாருவின் பங்களிப்பு அவர் தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு திடீரென்று நீண்ட காலம் தேங்கிவிட்ட இலக்கியத்தின் மொழி நடையை நவீனப்படுத்தியதே.இது ஒரு ஆச்சரியமான விஷயம்.பழைய மொழியை பழைய உள்ளடக்கத்தை எதிர்த்து எழுதிக்கொண்டிருந்தவர்களும் அதே மொழியில்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள்.உண்மையில் புதுமைப்பித்தன் ஏற்படுத்திய உடைப்புக்குப் பிறகு அதன் அதிர்ச்சியிலிருந்து மீள்வது போல தமிழ் இலக்கிய உலகம் நீண்ட காலத்துக்கு புதுமைப்பித்தனுக்கும் முந்திய மொழிக்குப் போய்விட்டது.இந்த வகையில் சாருதான் மீண்டும் இந்த இறுக்கத்தை உடைத்தவர் எனலாம்.தனிப்பட்ட பிரதிகளாக அவரது நாவல்கள் முழுமை … Read more

பிறந்த நாள் அன்று வந்த ஒரு கடிதம்…

தமிழில் எழுத்தாளனாக இருப்பது, இந்தியாவில் பெண்ணாகப் பிறப்பதைப் போல.  எவன் எப்போது கையைப் பிடித்து இழுப்பான், பலாத்காரம் பண்ணுவான் என்று தெரியாது.  எழுத்தாளனுக்கு அப்படிப்பட்ட பிரச்சினை இல்லை.  வேறு விதமான ஒரு பிரச்சினை இது.  தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும்தான்.  வேறு மொழி எழுத்தாளர்களுக்கு நான் சொல்வதே புரியாது.  நீங்கள் ஒரு மருத்துவர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு விமானியும் வந்து நான் மருத்துவர் என்று சொல்ல மாட்டார்.  மருத்துவர் என்றால் மருத்துவர்தான்.  அதிலேயே சித்த மருத்துவர், ஆயுர்வேத … Read more

அ-காலம் : முன் வெளியீட்டுத் திட்டம்

ஐந்து நாட்களுக்கு முன்பு யெக்கரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. டயர் பஞ்சராக்கப்பட்டிருந்தது. யெக்கருக்குத் தன் புதல்வன் கமாலின் ஞாபகம் வந்தது. கமாலும் இப்படித்தான் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தான். இவர்கள் யாரும் இனிமேல் சிறுவர்கள் அல்ல. இவர்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள். மனிதர்களின் குரல்வளையைக் கடித்துக் குதறும் நாய்களைப் போல் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் கொலை செய்யும் போது இவர்களின் புருவம் கூட உயர்வது இல்லை . இந்தச் சிறுவர்களுக்கு இந்த உலகத்தில் பெற்றுக்கொள்ள எதுவும் இல்லை. … Read more

அருண்மொழி நங்கையின் நூல் வெளியீடு

நேற்று என் பிறந்த நாளை நான் கொண்டாடவில்லை. நாள் முழுவதும் ஔரங்கசீப்பின் அறுபத்தெட்டாவது அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தேன். இந்த அத்தியாயத்தை எழுதி முடிக்க இரண்டு நாட்கள் ஆயின. இதோ இப்போதுதான் முடித்தேன். இப்போது 19.12.2021 காலை ஏழரை மணி. வாக்கிங் செல்லவில்லை. நேற்று மாலை மட்டும் வாசக சாலை நண்பர்கள் அளித்த பரிசை வாங்கிக் கொள்வதற்காக தக்கர் பாபா வித்யாலயம் சென்றேன். அதில் செல்வான இரண்டு மணி நேரத்தை இரவு கண் விழித்து சரி செய்தேன். என் … Read more