முல்லா ஷா

நான்தான் ஔரங்கசீப்… நாவலின் தற்போதைய அத்தியாயங்களில் முல்லா ஷா பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவர் அடங்கிய இடம் லஹௌரில் மியான் மீர் கிராமத்தில் உள்ள தரம்பூர் என்ற இடத்தில் உள்ளது. முல்லா ஷாவின் பல ஓவியங்கள் லண்டன் நூலகங்களில் உள்ளன. அதில் ஒன்று கீழே உள்ளது. இந்தப் புகைப்படத்தின் காப்புரிமை பிரிட்டிஷ் லைப்ரரி போர்டில் உள்ளது.

கார்த்தூஸியர்களின் பச்சை மது

கார்தூஸியா என்று எழுதுவது தவறு என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் Carthusia என்றால் தமிழில் கார்த்தூஸியா என்றே எழுத வேண்டும். ஏனென்றால், கார்தூஸியா என்று எழுதினால் விவிலியம் படிக்காதவர்கள் Cardhusia என்று படித்து விடவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் ஆசிரியர் தவறாக எழுதினாலும் எடிட்டர்தான் சரி செய்ய வேண்டும். இந்த இடத்தில் அரூ. குறிப்பிட்ட கதையை நான் இன்னும் படிக்கவில்லை. இன்று இரவு 8.50 மணிக்கு ஃபாத்திமா பாபு க்ளப் ஹவுஸில் இந்தக் கதையை வாசிக்கிறார். நானும் … Read more

காஃபிக்கு எப்படி ஆர்டர் கொடுப்பது?

என்ன நடந்திருக்கிறது என்றால், ஸீரோ டிகிரி பதிப்பக விழா முடிந்ததும் எங்கள் ஜமா அப்படியே கிளம்பி ஏற்காடு போய் விட்டது.  நானோ தொடர்ந்து வினித்தைத் திட்டித் திட்டி ஒவ்வொரு நாளாக கட்டுரை போட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொன்றையும் படித்து விட்டு ஏற்காட்டில் ஒவ்வொருத்தரும் வினித்தைப் பிடித்து இன்னும் சாத்தியிருக்கிறார்கள்.  சுரேஷ் சாத்தியதுதான் வேடிக்கை.  ஏண்டா, நான்தான் ரொம்பத் தெளிவாச் சொன்னேனேடா, அஞ்சு நிமிஷத்துக்கு மேல பேசாதேன்னு?  அப்படியும் ஏண்டா கேட்கலை? சரி விடுங்கள்.  அதற்கே மறுபடியும் போக வேண்டாம்.  … Read more

வாழ்க நீ எம்மான்…: அ. மார்க்ஸ் (முகநூலில் எழுதியது)

இரவு மணி பத்து 12.35. மகாகவி பாரதியின் கால வரிசைப்படுத்தப்பட்ட படைப்புகளில் 1908 ஆம் ஆண்டு ஜனவரி நாட்களின் அவரது பதிவுகளைப் பார்த்துக் கொண்டுள்ளேன்.ஏற்கனவே பலமுறை நான் எழுதியுள்ள ஒன்று இங்கே நிரூபணம் ஆவதைக் காண்கிறேன். 1907 இல் இந்தியத் துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒரு எழுச்சி ஏற்பட்டது. பல இளைஞர்கள் அரவிந்தர் முதலான அன்றைய தலைவர்களின் கருத்துக்களால் எழுச்சி பெற்றிருந்தனர். அந்நிய வெள்ளை ஆட்சியை அழித்தொழிக்க அவர்கள் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் … Read more

நஷ்டம் எனக்குத்தான்…

வினித் போன்றவர்களைப் பற்றி விமர்சித்து எழுதுவதால் வினித்துக்கு மனக்கஷ்டம் என்பது போக, இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நான்தான்.  உதாரணமாக, பொள்ளாச்சி மகாலிங்கம் மாதிரி ஒரு கோடீஸ்வரருக்கு என் எழுத்து பிடிக்கிறது, சந்திக்க நினைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  உடனே வினித் பற்றிய கட்டுரைதான் அவருக்கு முன்னே காண்பிக்கப் படும்.  அதைப் படித்த பிறகு மனிதர் என் பக்கம் திரும்பிப் பார்ப்பாரா?  அதனால்தான் சொல்கிறேன், என் நண்பர்கள்தான் எனக்குப் பெரிதும் பிரச்சினையாக இருக்கிறார்கள் என்று.  எழுதாமல் இரேன் என்றால் … Read more

வாழ்விலே ஒரு முறை…

பொதுவாக என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குப் புரியும்.  நான் மனிதர்களை விரும்பவில்லை.  குறிப்பாக இந்தியர்களின் பழக்க வழக்கங்கள் எனக்கு மிகுந்த எரிச்சலைத் தருகின்றன.  இந்தியர்கள் ஒன்றும் நரகத்திலிருந்து வரவில்லைதான்.  ஆனால் இவர்கள் இவர்களின் பெற்றோரினால் இப்படியாகத்தான் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்.  எங்கள் வீட்டுக்கு மேல் வீட்டில் குடியிருப்பவர்கள் பெரும் கோடீஸ்வரர்கள்.  ஆனால் மேல் வீட்டிலிருந்து எங்கள் பால்கனியில் சகலமும் வந்து விழுகிறது.  வாழைப்பழத் தோல், சாக்லெட் காகிதங்கள், கோழி மற்றும் ஆட்டு எலும்புத் துண்டு, தரை பெருக்கும் துடைப்பானிலிருந்து விழும் … Read more