ஸ்மாஷன் தாரா: முன் வெளியீட்டுத் திட்டம்
ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது மொழி ஒரு உருவமற்ற அரங்கமாக மாறுகிறது. நிழல்களும் பிம்பங்களும் ஒரு புகை நடனமாக மேக உருவுகளின் ஓயாத சலன இசையாக வெளிப்படுகின்றன. காலம் ஒரு நீர்க்கடிகாரமாய் மழையாகவும் ஆவியாகவும் வானத்திற்கும் பூமிக்குமாக பொழிவதும் பறப்பதுமாக சாருவின் கவிதைகளில் இயங்குகிறது. இது வாழ்வின் … Read more