சாரு நிவேதிதா – எழுத்துக்கும் வாழ்க்கைக்குமான விளையாட்டு : அராத்து

(அராத்துவின் இந்தக் கட்டுரையை வெளியிடலாமா வேண்டாமா என்று மிகவும் குழப்பத்துடன் யோசித்தேன். பிறகு என்னுடைய தற்காலத்தியப் பாதுகாப்பை முன்னிட்டு ஒருசில வாக்கியங்களை மட்டும் சிறிதளவு மாற்றி வெளியிட்டிருக்கிறேன், அராத்துவின் அனுமதி வாங்காமலேயே. ஆட்சேபிக்க மாட்டார் என நம்புகிறேன். ஏற்கனவே அவர் என்னிடம் ”உங்களிடம் நெருக்கமாக இருக்கும் ஒருசிலர் உங்களை மைலாப்பூர் மாமா மாதிரி ஆக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது” என்று சொல்லி வருகிறார். கட்டுரையில் கை வைத்தது என்னுடைய பாதுகாப்பை முன்னிட்டே தவிர வேறு … Read more

ஒரே ஒரு கேள்வி (குறுங்கதை மாதிரி)

அந்த நண்பர் ஹைதராபாதில் வசிக்கிறார். பால குமாரனின் தீவிர பக்தர்.  ஆம், பக்தர்.  ஒரு கட்டத்தில் அவருக்கு குருவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் வந்தது.  (அவரே சொன்னது.)  மாற்றிக் கொண்டார்.  நான்தான் அவர் தேர்ந்தெடுத்த புதிய குரு.  ஹைதராபாதுக்கு விமான டிக்கட் போட்டு வரவழைத்தார்.  டிக்கட் வந்த போது அவரிடம் கேட்டேன், ரிட்டன் டிக்கட் அனுப்பவில்லையே நீங்கள்? நீங்கள் இங்கே வந்த பிறகு சாவகாசமாகப் போட்டுக் கொள்ளலாம் சாரு. 2010 டிசம்பர் 31.  ஹைதராபாத் … Read more

சாருவின் படைப்பின் நோக்கம்: நிர்மல்

சாருவின் படைப்புகளுக்கு நோக்கம் எதுவும் இல்லை என்றும், அதிர்ச்சி அளிப்பது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கக் கூடும் என்றும் பலர் கருதுகிறார்கள். இது குறித்து என்னுடைய சில புரிதல்களைக் கோர்த்துள்ளேன். தனி மனித விடுதலை என்பது ஒருவரின் ஈகோவைக் கடப்பது மட்டுமல்ல, மற்றவர்களை ஆதிக்கம் செலுத்தத் தூண்டும் உணர்விலிருந்தும் விடுபடுவதுதான். நம் அடையாளம், அறிவு, அழகு, செல்வம், சமூக அமைப்பு, அரசு, அதிகாரங்கள், பதவி, உறவுகள் என இவைகள் மூலம் நாம் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறவர்களாக … Read more

வதைகளின் கலைஞன்: வளன் அரசு

சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதாக அறிவித்தவுடன் பல்வேறு கொண்டாட்டங்களும் சர்ச்சைகளும் நிலவிவருகிறது. என்னைப் பொருத்த வரை எனக்கு மிகுந்த ஆச்சரியம் என்றாலும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சாருவை நான் என் தந்தையாக பாவித்து வருவதால் வாழ்த்துகள் சொல்வது அபத்தமாக இருக்கும். இப்போதுதான் இந்தியா வந்துவிட்டு திரும்பியதால் அடுத்த விடுமுறைக்கு இரண்டு ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் மாத விருது நிகழ்வுக்கு கண்டிப்பாக வந்திருப்பேன். தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர் என்ற நிலைக்கு உரியவர் சாரு நிவேதிதா … Read more

இதுதான் நான்…

இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எல்லா மனிதர்களுமே இப்படித்தான் இருந்திருப்பார்கள், ஈகோ, பணம், அதிகாரம் போன்றவற்றின் அறிமுகம் இருந்திராவிட்டால். வளன் அரசுவின் கட்டுரையிலிருந்து… இப்படி எதிர்ப்பின் அடையாளமாக இருக்கும் சாரு ஓர் ஆன்மீகவாதி என்பதை முதலில் என்னாலும் நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் எங்களுடைய முதல் சந்திப்பில் அவர் கூறிய வாசகம் நெஞ்சைவிட்டு இன்னும் நீங்க மறுக்கிறது: “இந்தியா மாதிரியான ஒரு நரகத்தில் வாழும் போது கடவுளின் காலைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் … Read more

சிறந்த பாராட்டுகளில் ஒன்று…

என்னுடய கல்லூரி முதல் ஆண்டு மிகவும் வறட்சியாக இருந்தது. தஞ்சாவூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதாலும் நான் ஒரு கத்தோலிக்கக் குரு மாணவன் என்பதாலும் நண்பர் வட்டம் மிகவும் சிறியது. இந்த நிலையில்தான் தமிழ்தாசன் எனக்கு ஆசிரியராக அறிமுகமானார். ஆரோக்கியதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்தாசன், தஞ்சை மறைமாவட்டத்தைச் சார்ந்த கத்தோலிக்கப் பாதிரியார். பாதிரியார் என்பதனால் பெரிதாக வெள்ளை அங்கி அணிந்து, அன்பே உருவாகி, எப்போதும் பிரசங்கம் செய்துகொண்டிருப்பவராகக் கற்பனை செய்துகொள்ளக்கூடாது. அவர் தன் சொந்த முயற்சியில் … Read more