தேவிபாரதியின் நொய்யல்

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நொய்யல் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  ஒரு நாவலைப் படிக்க இத்தனைக் காலம் எடுத்துக் கொண்ட்து இதுவே முதல் முறை.  அந்த அளவுக்கு நான் அந்த நாவலில் மூழ்கிக் கிடந்தேன்.  அதிலேயே வாழ்ந்தேன்.  திரும்பத் திரும்பப் படித்தேன்.  நாவல் பற்றி இங்கே நான் மதிப்புரையெல்லாம் எழுதப் போவதில்லை.  பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் என்ற நாவலை உலகின் தலைசிறந்த ஐம்பது நாவல்களில் வைப்பேன் என்றால், தேவிபாரதியின் நொய்யலுக்குத் தமிழ் நாவல் வரலாற்றிலேயே முதல் … Read more

பசி மற்றும் இம்சை குறித்து ஒரு ஆட்டோஃபிக்ஷன் கதை (குறுநாவல்)

புகைப்படம்: ஒளி முருகவேள் 1.பச்சைக் கண் சனிக்கிழமை வாசகர் வட்ட சந்திப்பு முடிந்து எல்லோரும் அவரவர் இடத்துக்குக் கிளம்பி விட்டார்கள்.  நாங்கள் ஐந்து பேர் – நான், கொக்கரக்கோ, வினித், ஒளி முருகவேள், பாண்டியன் – மட்டுமே அந்த வன இல்லத்தில் தங்கியிருந்தோம்.  சந்திப்புக்கு வந்த நண்பர்கள் யாரும் இரவு எங்களோடு தங்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தேன்.  அது பற்றி நான் பலமுறை என்னுடைய இணையதளத்தில் போதும் போதும் என்கிற அளவுக்கு எழுதியிருக்கிறேன்.  தங்கினால் பெரிய … Read more

பசி மற்றும் இம்சை கதை பற்றிய ஒரு விவரம்

பசி மற்றும் இம்சை குறித்த ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் சிறுகதையில் வரும் ஒரு பாத்திரம் பற்றி என் நண்பர் ஒருவர் ஒரு சந்தேகம் கேட்டிருந்தார். அந்த சந்தேகத்துக்குப் பதில் எழுத முனைந்தேன். அது ஒரு நீண்ட கதையாக ஓடி விட்டது. அதனால் அதை மூன்றாம் பாகமாக ஆக்கினேன். ஆக, சிறுகதை குறுநாவலாக மாறி விட்டது. கதையின் பழைய பகுதிகளை தளத்திலிருந்து நீக்கி விட்டேன். கதையில் சில விவரங்கள் தேவைப்பட்டதால் சீனிக்கு அனுப்பியிருக்கிறேன். வந்ததும் இங்கே பதிவேற்றம் செய்வேன். கதையின் … Read more