நான்

நான் நின்ற நிலையிலும் ஓடிக் கொண்டிருக்கும் புரவி தூளியில் இருக்கும் போதும் விரைந்து கொண்டிருக்கும் அம்பு பறக்காமலிருக்கும்போதும் பறந்து கொண்டிருக்கும் பறவை பெய்யாமல் இருக்கும்போதும் பெய்து கொண்டிருக்கும் மழை தணிந்து கிடக்கும் போதும் எரிந்து கொண்டிருக்கும் தழல் பேசிக் கொண்டிருக்கும்போதும் உள்ளுறைந்து கிடக்கும் மௌனம் அமைதியாய் சென்று கொண்டிருந்தாலும் ஆனையை விழுங்கும் சுழல் எழுதாமல் இருக்கும்போதும் எழுதிக் கொண்டிருக்கும் கவி

மாணவர்களுக்கு…

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எனக்கு ஒரு மாணவரிடமிருந்து ஒரு வாட்ஸப் செய்தி வந்தது. கையெழுத்திட்ட நான்தான் ஔரங்ஸேப் கிடைத்தது என்ற சந்தோஷ செய்தியைப் பகிர்ந்து கொண்டார். வீட்டில்தான் கொஞ்சம் திட்டு விழுந்தது, ஆயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கியதற்காக என்று எழுதியிருந்தார். அவர் சேமித்து வைத்திருந்த அறுநூறு ரூபாயுடன் பெற்றோரிடமிருந்து வாங்கிய நானூறையும் சேர்த்து முன்பதிவுத் திட்டத்தில் புத்தகத்தை வாங்கினாராம். நீங்கள் ஜீபேயில் இருக்கிறீர்களா, ஐநூறு ரூபாய் அனுப்பி விடுகிறேன், அதை உங்கள் பெற்றோரிடம் கொடுத்து விடுங்கள் … Read more

வாழ்வின் முதல் வேண்டுதல்

அன்புள்ள சாரு, நான் கடவுள் நம்பிக்கை கொண்டவள். ஆனால் இதுவரை கடவுளிடம் ஏதும் கேட்டதில்லை. வேண்டிக் கொண்டது இல்லை. அதிகமாகக் கோவிலுக்கும் செல்வதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை கேரளத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு மட்டும் செல்வதுண்டு. அது எங்கள் குலதெய்வம் என்பதால் போய்த்தான் ஆக வேண்டும். ஆனால் எனக்கு சில ஆன்மீக அனுபவங்கள் கிடைத்ததுண்டு. அதை நான் யாரிடமும் சொல்வதில்லை. சொன்னால் பைத்தியக்காரி பட்டமும் கேலியும் கிண்டலும்தான் கிடைக்கும். ஆனால் சில மாதங்களுக்கு முன் பகவதி அம்மனிடம் … Read more