நான்தான் ஔரங்ஸேப்…

முன்பதிவு செய்த “நான்தான் ஔரங்ஸேப்…”புத்தகம் கிடைக்கப்பெற்றது. வீட்டில் புத்தகத்தை பிரித்துப் பார்த்துவிட்டு எழுத்தாளரின் கையெழுத்துடன் வந்திருப்பதைக் கண்டு… அதிகப்பணம் செலுத்தி வாங்கிவிட்டு நான் அதை அவர்களிடம் மறைப்பதாக சந்தேகத்துடன் கேட்டார்கள். எனக்கே கையெழுத்து சமாச்சாரம் இப்போதுதான் தெரியும் என்று அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். அடுத்ததாக….நேரடியாக எனது பெயர் குறிப்பிட்டு இருப்பதைப் பார்த்து நீங்கள் எனக்கு மிக நெருக்கமான நண்பரா என்று கேட்டார்கள். “என்னது எனது பெயரை குறிப்பிட்டிருக்கிறாரா….” அதைப் பார்த்ததும் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை, செம … Read more

பாண்டிச்சேரி சந்திப்புக்கு வரலாமா?

வணக்கம் சாரு, மிக மிகத் தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும், ஒரு வரி வாழ்த்துச் செய்திக்கு பதில் இந்த விருது குறித்த என் பார்வையை உங்களுக்குத் தெரியபடுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் நான் எதையும் எழுதும் நிலையில் இல்லை,  இப்பொழுது நிலைமை கொஞ்சம் சீராகி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த விருது உங்களுக்கு கொடுப்பதன் மூலம், விஷ்ணுபுரம் விருதுக்குப் பெருமை சேர்கிறது என்ற அளவிலே என் புரிதல் இருந்தது, ஆனால் அது மட்டுமே முழுமை இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். … Read more

நூலகங்கள், மாணவர்கள்…

பிரியத்திற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு, நான் முத்து விஜயன்.  பொறியியல் இறுதியாண்டு படித்து கொண்டு இருக்கிறேன். அதாவது முடித்து விட்டேன் (இப்பொழுது தான்) இரண்டு அரியர் விழுந்து விட்டது. இப்போது உங்கள் வலைத்தளத்தில் “மாணவர்களுக்கு…” என்றொரு பதிவைப் படித்தேன். நான் தான் ஔரங்ஸேப் நாவல் படிக்க விரும்பும் மாணவர்கள் எனக்கு எழுதுங்கள், குறைந்த விலைகக்காவது நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்கிறேன் என எழுதி இருந்தீர்கள். படித்ததும் வியப்பாக இருந்தது. நாமும் இவருக்கு எழுதலாமா என கொஞ்சம் அல்பமாக … Read more