வாழ்த்துக்கு நன்றி…

விஷ்ணுபுரம் விருதுக்காக நேற்று எனக்கு வாழ்த்து சொன்னவர்களின் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டிருந்தேன். இன்று அது சாத்தியமில்லை போல் தெரிகிறது. ஏனென்றால், என் தொலைபேசி எண் ஒரு முந்நூறு பேருக்குத் தெரிந்திருக்கும் என்றால் அதில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரிடமிருந்தும் வாழ்த்து வந்து விட்டது. அந்த ஒருவர் எழுத்தாளர். அதற்கு அவருக்குக் காரணங்கள் இருக்கலாம். ஒன்றும் பிரச்சினை இல்லை. சினிமா உலகிலிருந்து இயக்குனர் வஸந்த், ஏ.ஆர். ரஹ்மான், பார்த்திபன் மூவரும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள். வாழ்த்து அனுப்பாதவர்களில் என் … Read more

பார்த்ததில் ரசித்தது

மீ: என்ன சாரு போயும் போயும் அந்த விஷ்ணுபுரம் விருதை வாங்குறீங்க… சாரு: சின்னதா சண்டை போட்டோன்ன என்ன விட்டுட்டு ஜெயமோகனை வச்சி புக்கு ரிலீஸ் பண்ணவன்தான நீ… கார்ல் மார்க்ஸின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து…

விமர்சிப்பவர்களுக்கு அராத்துவின் விளக்கம்

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பை விமர்சிக்கலாம். அது அவரவர் விருப்பம். “ஏற்கனவே சாருவைப்பற்றி ஜெயமோகன் இப்படி எழுதியிருக்கிறார்” என்று பழைய வரலாறை தூக்கிக் காட்டுபவர்களுக்கு மட்டும் சிறிய விளக்கம். சாருவை ஜெயமோகன் கன்னாபின்னாவென விமர்சித்து இருக்கிறார். நக்கலடித்து இருக்கிறார். சாரு ஜெயமோகனை அதைவிட அதிகமாக விமர்சனம் செய்திருக்கிறார். கொடூரமாக வசை மழை பொழிந்திருக்கிறார். கலாப்ரியா நடத்தும் குற்றாலம் கவிதைப்பட்டறைக்கு சாரு அவந்திகாவுடன் சென்றிருந்த போது , ஜெயமோகன் சாருவைப் பார்த்து – நீங்க வாரமலர்ல கிசு … Read more

சாரு நிவேதிதா – வாழ்ந்து வரும் ஷோர்பா: இராயகிரி சங்கர்

நம் நீண்ட ஞானமரபில் சித்தர்களின் பங்களிப்பை ஒருபோதும் மறுத்துவிட முடியாது. தொலைந்து போன ஞானச் செல்வம் அம்மரபு. புதுமைப் பித்தனுக்கு வெள்ளாள பிறப்பின் மூலம் சைவப் பின்புலம் இயல்பாக சாத்தியப்பட்டாலும் சித்தர்களைப் பற்றிய புனைவுகளையும் அதிகம் எழுதியிருக்கிறார். பாரதியை சித்தர்களில் ஒருவர் என்றே மதிப்பிடலாம். ந.பிச்சமூர்த்தி, மெளனி, பிரமிள், மு.தளையசிங்கம் என்று அம்மரபு நம்மிடையே அறுபடாமல் இருந்து கொண்டுதான் உள்ளது. சமகாலத்தில் போகன்சங்கர் அத்தகைய புனைவு வெளியை படைப்பாக்கும் வாழ்வியல் அனுபவங்கள் உள்ளவர். ஜெ.நிறைய எழுதி இருக்கிறார். … Read more

விஷ்ணுபுரம் விருது 2022: இராயகிரி சங்கர்

தேய்வழக்கானது என்றாலும் சொல்லியாக வேண்டியுள்ளது. முகநூலின் மோசமான பின் விளைவுகளில் அதுவும் ஒன்று. கும்பல் மனோபாவம். என்ன ஏது என்கிற சுய அனுபவம் இல்லாமலேயே எல்லாம் அறிந்த தோரணை யில் அடித்து விடுவது. அறியாமையே அந்த துணிவைத் தருகிறது. பெரும்பான்மையோடு ஜல்லி அடிப்பதன் மூலம் தன்னுடைய அறிவுஜீவி பிம்பத்திற்கு ஏதும் சேதாரம் ஆகாது என்ற உறுதிப்பாடு வேறு. இன்றும் சாரு நிவேதிதாவின் தீவிர வாசகர்களில் நானும் ஒருவன்.அவருடைய எந்த நூல் வெளிவந்தாலும் உடனே வாங்கி வாசித்துவிடுகிறேன். உண்மையில் … Read more

கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா: அராத்து

என்னைப் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளில் முக்கியமானது. அரூவில் வந்தது. https://aroo.space/2020/07/04/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/ கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா | அரூ (aroo.space)