ஹெட் மஸாஜ் பற்றி வளன்

நான் போன ஜென்மத்தில் தாய்லாந்தில் பிறந்து ஆயிரக்கணக்கானோருக்கு மஸாஜ் செய்து விட்டுக் கொண்டிருந்தேன் போலிருக்கிறது. வளன் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த பதிவைப் பாருங்கள்: ஆட்டோஃபிக்ஷன் வகைமையில் நிஜத்துக்கும் கற்பனைக்குமான எல்லைக்கோடுகள் இல்லாமல் போனாலும் வாசக மனம் எது உண்மை எது புனைவு என்பதை தேடிக்கொண்டேயிருக்கும். இந்தக் கதையில் வரும் கோவிந்தன் யார் என்பதை மனம் தேடிக்கொண்டேயிருக்கிறது. அதேபோல இந்த ஹேட்மசாஜ் எனக்கும் கிடைத்திருக்கிறது. தரையில் கால் மடித்து உட்கார முடியாததால் அன்று சாரு வீட்டில் நான் படுத்தவாக்கிலேயே பேசிக் … Read more

ஒரு கேள்வியும் பதிலும்

வணக்கம் சாரு. விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டதும் சொல்ல நினைத்தேன். தாவித் திரியும் மனநிலையில் அப்பொழுது சொல்லவில்லை. வாழ்த்துகள். ஓய்வு நேரங்களின் பெரும்பகுதியை வாசிப்பிற்குத் தருவதற்கான நெருக்கடிகள் இல்லாது இருந்த காலகட்டத்தில் எங்கள் ஊர் நூலகங்களே அதற்கு உதவின. ஆனால், அங்கிருந்து கிடைத்த பெரும்பாலான நூல்களை வாசிப்பதற்கான மனநிலையை நான் கடந்திருந்தேன். ஆரம்பகால வாசகனுக்கு, பொழுதுபோக்கு சார்ந்த வாசிப்புகளுக்கான புத்தகங்களே நூலகங்களை அடைத்து நின்றன. இப்போதும் அத்தனை  முன்னேற்றம் இல்லை என்றபோதும் இலக்கியம் சார்ந்த ஆளுமைகளின் படைப்புகளைத் தேடினால் … Read more

நிகழ்காலத்தில் நின்றபடி…

Charu … Of late I can feel our old Charu… சாருவின் எழுத்தில் இருக்கும் அந்தத் துள்ளல், பகடி எல்லாம் மீண்டும் பழைய வீரியத்துடன் திரும்ப வந்திருப்பது போல் இருக்கிறது. இந்த சாருவை நான் சில பல ஆண்டுகளாக மிகவும் மிஸ் பண்ணினேன். உங்கள் எழுத்தின் சிறப்பு என்னவென்றால், அது காலத்தைக் கடந்து நிற்கிறது. ஒரு வாசகர் எந்தக் காலகட்டத்தில் உங்கள் எழுத்தைப் படித்தாலும் அது அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது. உதாரணமாக, இருபத்தைந்து … Read more