நொய்யல் – ஒரு நவீனத்துவ காவியம்
எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தமது வாழ்க்கை பற்றி எழுதுவதில் விருப்பம் அதிகம். எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என்னுடைய முதல் நாவலே சுயசரிதத்தன்மை கொண்டதுதான். ஆனால் இப்படி சுயசரிதத்தன்மை கொண்ட பல நாவல்கள் இலக்கியரீதியாக வெற்றியடையாமல் வெறும் ஆவணமாக மட்டுமே மிஞ்சுவதையும் காண்கிறோம். மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே மற்றவரிடம் சொல்வதற்கு தன்னைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது. ஒருவருடைய பாட்டி மண் பானை நிறைய தங்க நகைகளை வைத்துக் கொண்டிருந்திருப்பார். பேரனோ சிங்கிள் டீக்கு சிங்கி அடிப்பவனாக இருப்பான். … Read more