இன்னும் வராத வாழ்த்து

விஷ்ணுபுரம் விருது குறித்து என்னைப் பலரும் வாழ்த்தினார்கள். மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இருந்தாலும் எனக்கு வராத வாழ்த்து பற்றி மனம் கிலேசம் அடைகிறது. தமிழக முதல்வர் இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

விருது பற்றி…

விருது பற்றி பலரும் எழுதி விட்டார்கள். எதற்குமே எதிர்வினை காட்டாத காயத்ரியே எழுதி விட்டாள். எல்லாவற்றிலும் ஆகப் பிடித்ததாக வளன் அரசு எழுதியதைச் சொல்வேன். ஏனென்றால், அவன் என்னை மிக அரிதாகவே சந்தித்திருக்கிறான். ஒருமுறை என் வீட்டுக்குக் கீழே வந்து நின்று கொண்டு கீழே வாருங்கள் அப்பா என்றான். அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான். ஆனால் அதற்கு முந்தின நாள்தான் நான் ஒரு நண்பரைப் பார்த்து விட்டு வீட்டுக்கு காலை ஒன்பது மணிக்கு வந்திருந்தேன். வீடே அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது. … Read more

குடியும் விருதும்

கீழே காணும் கவிதையை டார்ச்சர் கோவிந்தனுக்கு அனுப்பினேன். கேவலம் கேவலம், இதெல்லாம் ஒரு கவிதையா என்றார். ஐயோ, நீங்கள் எழுதியதிலேயே சிறந்த கவிதை இதுதான் என்று —————————சொன்னாரே என்றேன். (டேஷில் ஒரு கவிஞரின் பெயர்) உங்களுக்கு ஜால்ரா கூட்டம்தான் பிடித்திருக்கிறது. தயவுசெய்து இதை வெளியிடாதீர்கள் என்றார் மீண்டும் டார்ச்சர். டார்ச்சர் சொல்வதையெல்லாம் கேட்டால் நான் மைலாப்பூர் மாமா மாதிரிதான் ஆவேன். அதனால் மேற்படி கவிதையை இங்கே வெளியிடுகிறேன். எனக்கு ஒரு விருது கிடைத்ததுவிழாவுக்குப் போகும்போது குடித்து விட்டுப் … Read more