ஆரோவில் சந்திப்பு: நிர்மல்

சாருவின் ஆரோவில் சந்திப்பு சிறப்பாக நடந்தது. நானும் கலந்து கொண்டேன். அராத்து, வினித் இன்னும் பல வாசகர்களோடு ஒரு இரவும் ஒரு பகலும் சிறப்பாக கடந்தது. சாருவை முதல் முறையாக பத்து வருடங்கள் முன் மகாபலிபுரத்தில் சந்தித்தேன். அன்று பார்த்த அதே ஸ்டைலோடும், அதே புத்துணர்ச்சியோடும் இளமை ததும்ப சிலருக்கு இணையாகவும் பலரை விஞ்சும் அளவுக்கும் கொண்டாடினார். அவரது தனித்துவமான முறையில் அன்புடனும் பாசத்துடனும் கண்டிப்புடனும் வாசகர்களுடன் உரையாடி மகிழ்ந்தார் , மகிழ்வித்தார். பேச்சின் மூலமாக மட்டுமன்றி … Read more

அழுகல் முட்டை: எதிர்வினைகள்

அழுகல் முட்டை படித்தேன். அந்தக் குறிப்பிட்ட ஸூம் மீட்டிங்கையும் கேட்டேன். கடும் கோபம் ஏற்பட்டது. இந்தக் கண்றாவியையெல்லாம் எப்படி நீங்கள் சகித்துக் கொள்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. இத்தனை பொறுமைசாலியான ஒரு மனிதரை என் வாழ்வில் நான் சந்தித்ததில்லை. இனியும் சந்திக்க முடியும் என்று தோன்றவில்லை. ஒன்றும் தெரியாத மூடர்கள்தான் சத்தம் போடுவார்கள். அதைத்தான் அந்த அரைவேக்காடுகள் செய்திருக்கின்றன. Algebra conversations interview was the first interview of yours I watched, got impressed … Read more

அழுகல் முட்டை தொடர்பாக

கோவிட் ஊரடங்கு காலகட்டத்தில் அராத்துவை முகநூலில் இயங்கும் குழுமம் ஒன்று நேரலை நிகழ்விற்கு அழைத்திருந்தார்கள். அது ஒரு இளையராஜா பஜனை மடம். அராத்து வழக்கம் போல பேச ஆரம்பிக்க, குழுமத்தின் மகளிரும் தடிமாடுகளும் கமெண்ட் பெட்டியில் கொதித்தெழுந்து உருண்டுகிடந்ததை பார்த்துப்பார்த்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது. அராத்து அப்படித்தான் பழகினவன் பழகாதவன் என்று பார்க்கக்கூடிய ஆளில்லை. தன் கருத்துக்களை நறுக்குத்தெறித்தாற்போல் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிற ஆள். சாரு அப்படியில்லை, அதனால்தான் அழுகல் முட்டை நேர்காணலில் அந்த புரட்சிப்புயலாள் கேட்ட … Read more

Symbols of Diversity in Writing: Voicing Dissent with Charu Nivedita at m.i.l.a.p. 2018

மணிப்பால் பல்கலைக்கழகத்தில் நடந்த உரையாடல் பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். அதன் காணொலியை எடுத்து அனுப்பியிருந்தார் ஸ்ரீராம். கீழே பார்க்கவும். இங்கே தமிழில் சாரு விழுந்து விட்டார் என்று இளிக்கும் அல்பங்களும் சேர்ந்து இந்தக் காணொலியைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். https://www.youtube.com/watch?v=CbE56BB9tjM