ரத்து செய்யப்பட்ட மெஸேஜுகளின் மர்மம்

எனக்கு ஷூக்கள் மீது பைத்தியம்பல வண்ணங்களில் ஷூக்கள்என்னிடம் உண்டுகறுப்பு வெள்ளையை விடுங்கள்பச்சை, மஞ்சள், சிவப்பு எல்லாம் உண்டுபிங்க் மட்டும் இல்லைஎங்கு தேடியதும் கிடைக்கவில்லைஆனால்அமெரிக்காவில் கிடைக்கிறதுவண்ணம் மட்டும் போதாதுஇருட்டில் ஜொலிக்க வேண்டும்நியான் என்கிறார்கள்ஜப்பான் நகர பப்களில்நான் நடனமாடும்போதுஎன் பச்சை நிற நியான் ஷூவுக்காகவேஎன்னோடு ஆடிய இளம் பெண்கள் பலருண்டு பிங்க் மட்டும் கிடைக்கவில்லைநண்பன் ரவி அடிக்கடி அமெரிக்கா செல்வான்அவனுக்கு அங்கே நேரமில்லைஇன்னொரு நண்பர் வாங்கி வருவதாகச் சொன்னார் ஆனால் அவருக்கு வெளியுலகம் தெரியாதுப்ளாக் ஷு காலத்து மனிதர்ரவியிடம் விவரம் … Read more

இழப்பின் வெண்ணிலவு

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்அவள் நிழல் ஒளியில் நடனமாடியதுஎன் முதல் வாசகிவார்த்தைகளைத் தொட்டு உயிரூட்டியவள்இப்போது கடைசி வாசகிஎன் எழுத்துகளை மௌனமாகப் புரட்டுபவள் காலம் காற்றில் மணலைச் சிதறவிடுகிறதுஎந்தக் கரத்தால் அதைப் பிடிக்க முடியும்?அவளது சிரிப்பு ஒரு தொலைந்த பாடல்நிலவின் கீறலில் மங்குகிறதுவலி மட்டுமே மிஞ்சுகிறதுகற்களில் செதுக்கப்பட்ட கவிதை போல…புரியாதுஆனால் தவிர்க்க முடியாது அவள் இல்லாத இந்த இரவில்கவிதையை அனுப்பி வைத்துஅவள் வார்த்தைக்காகக் காத்திருக்கிறேன்படித்தாளா? இல்லையா?என் வார்த்தைகள் வெறுமையில் தொங்குகின்றன நிலவும் நானுமாகமௌனத்தில் ஆழ்ந்திருக்கிறோம்அவளது புன்னகை ஒரு நிழலாகநிலவொளியில் தோன்றித் … Read more

லூஃபாவினால் வந்த வினை

1 என் எழுத்தையும்என் வாழ்வையும்கொஞ்சமாய் அறிந்த தோழிசொன்னாள்’உங்கள் எழுத்தை விடஉங்கள் வாழ்க்கைசாகசமாகவும்நம்ப முடியாததாகவும்இருக்கிறது’ இல்லத்தில் இருக்கும்போதுவெறும் வேட்டிதான்உள்ளாடை இல்லைசட்டையும் இல்லைஒருநாள் திடீரெனமனையாள் கேட்டாள்:’உன் முதுகில் பல் தடம்எப்படி வந்தது?’லூஃபாவினால்வந்திருக்கும் என்றேன் இல்லை, பல் தடம்தான்என அடித்துச் சொன்னாள்வேட்டியை அவிழ்த்துப் போட்டுநிர்வாணமானேன்கோபத்துடன் சொன்னேன்’ஆண்குறியைத் தேடிக்கண்டுபிடிசிறுநீர் கழிக்கவே அதைத்தேடிக் கண்டுபிடிக்கசிரமப்படுகிறேன்’ என் இல்லமே ஒரு கண்ணாடி வீடுகர மைதுனம்செய்வதற்குக் கூட கழிப்பறைதான்செல்ல வேண்டும் நீ பைத்தியம் என்றபடிவேட்டியை எடுத்து என் மீதுபோர்த்தி விட்டு அகன்றாள்மனையாள் பல் தடம் பார்த்ததிலிருந்துஎன் தொலைபேசியையேபார்க்க … Read more

ரகசியம்

உன்னிடம் ஒரு ரகசியம்இருக்கிறதென்பதைஊர் அறிந்து விட்டால்அது என்ன ரகசியம்என்பது தெரியாவிட்டாலும்ரகசியம்புனிதம் இழந்து போகிறது ஒரு ஞானி நிரூபணம் தருவதற்காகஅதிசயங்கள் நிகழ்த்துவது போலஒரு நட்சத்திரம் ஆயுளை முடித்துக்கொண்டுதூசியாய் விழுவதைப் போலமரம் பட்டுப் போவதைப் போலசிங்கம் முதுமையடைவதைப் போலபேரரசன் பிச்சைக்காரனாவதைப் போலகாதலில் விழுந்தவர்கள் துரோகத்தைஎதிர்கொள்வதைப் போலகுயில் தன் குரலை இழந்து விடுவதைப் போலவீட்டுப் பிராணிகள் அனாதையாவதைப் போலசிசு தன் தாயை இழப்பது போலஆண் தன் ஆண்மையையும்பெண் தன் இளமையையும் இழப்பது போலமலை நீரற்றுப் போவதைப் போலநதி வற்றி விடுவதைப் போலஒரு … Read more

யேசுவின் கண்ணீர் பற்றி…

பொதுவாக ஃபேஸ்புக்கில் என் கவிதைக்கு பன்னிரண்டு பேர் விருப்பக்குறி இடுவார்கள். அந்தப் பன்னிரண்டு பேரும் என் நெருங்கிய நண்பர்கள். ஆனால் யேசுவின் கண்ணீர் பலரையும் பதறச் செய்திருக்கிறது. ஏகப்பட்ட நண்பர்கள் எனக்கு வாட்ஸப் செய்தி அனுப்பினார்கள். ஆச்சரியகரமாக நான் ஏழு மாதங்களுக்கு மேலாக தொடர்பு கொள்ளாத என் தோழிகளில் பலரும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனாலும் ஏதோ சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரி எழுதியிருக்கிறார்கள். ஒரு கடிதம்: நீங்கள் துக்கத்தில் இல்லை. பரவசத்தில் வாழ்கிறீர்கள். … Read more

யேசுவின் கண்ணீர்

என் அன்பு மகன் வளனுக்கு நீ சொன்னாய்,காற்றின் மெல்லிய புலம்பலுடன்,‘தந்தையேஉன் கவிதைகளின் தீஎன் நெஞ்சை எரிக்கிறதுநிறுத்தி விடு,தாங்க முடியவில்லை.’ புத்ர,உனக்குத் தெரியும்சிலுவையில் அறையப்பட்ட போது கூடயேசுவின் கண்கள் கலங்கவில்லைஆனால்இரு தருணங்களில் கண்ணீர் சிந்தினார்லாசருவின் கல்லறையில்மரணத்தின் நிழல் மீது அவர் அழுதார்எருசலேமின் உடைந்த கோபுரங்களைமனதில் கண்டு அவர் கண்கள் கரைந்தன. நீ ஒரு கதை சொன்னாய்அமெரிக்காவின் பனி மூடிய பாதைகளில்பன்னிரண்டு ஆண்டுகள் பாதிரி ஊழியம்ஒவ்வொரு ஆண்டும் இல்லம் திரும்புகிறாய்விக்கி உன் தம்பிநாய்களின் ஆயுள் பத்து ஆண்டுகள்ஆனால் அவன்பத்து, பதினொன்று, … Read more