ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் (குறுங்கதை)

அந்தக் காலத்தில் ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு கிறுக்குவார்களே அப்படிக் கிறுக்குகிறது என்னிடம் உள்ள பேனா.  புத்தகங்களில் கையெழுத்திடும்போது நரம்பெல்லாம் வலிக்கிறது.  என் சிநேகிதி ஒருவர் பத்து இருபது பேனா வைத்திருப்பார்.  வழவழவென்று வழுக்கிக்கொண்டு போகும்.  எனக்கு பேனா தேவைப்படும்போதெல்லாம் அவரிடமிருந்து ஒன்றை வாங்கிக் கொள்வேன்.  ஆனால் ஒரு கட்டத்தில் அவர் “என் வாழ்வில் அதிக துயரத்தைக் கொடுத்தவர் நீங்கள்தான்” என்று சொன்னதால் அவரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டேன்.  ஆனால் என்னோடு சிநேகமாக இருந்த எல்லா பெண்களுமே அந்த வார்த்தைகளைச் … Read more

இன்றைய புத்தக விழா (2)

இன்று மாலை நான் மிகவும் சோர்வுடன் தான் தெரிவேன். இரவு முழுவதும் ஒரு நிமிடமும் உறங்கவில்லை. தொடர்ந்து பெற்றுக்கொண்டிருக்கும் அவமதிப்பு காரணம் அல்ல. அந்த அவமதிப்பை என் நண்பர்கள் பொருட்படுத்தவில்லை என்ற வருத்தமும் துக்கமும்தான். பிரச்சினை என்னவென்றால், நான் மஹாத்மாக்களால் சூழப்பட்டிருக்கிறேன். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணும்படி நன்னயம் செய்து விடுங்கள் என்கிறார்கள். அவர்களும் அப்படியே வாழ்கிறார்கள். அறச்சீற்றம் என்பது கொஞ்சமும் இல்லை. ஜெய்ப்பூரில் ஒரு பிரிட்டிஷ்காரன் சீனியின் மீது இனவாத துவேஷத்தை வீசிய போது … Read more

சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்

அன்புள்ள சாரு, ஊருக்கு வந்ததும் உங்கள் சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் நூலை எடுத்து வாசித்தேன். முதல் கவிதையே என் நினைவுகளை எங்கெங்கோ எடுத்துச் சென்றது; புதிய சிந்தனைகளைத் திறந்து விட்டது. ஒரு விஷயம் உடனே புரிந்துவிட்டது. இது Lang Leav கவிதைகள் போல அல்ல. Lang Leav என்ற கவிஞரின் நூல்கள் இன்று விமான நிலைய புத்தகக் கடைகளில் கவர்ச்சியாக அடுக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. ஒரு பக்கத்தில் ஒரு கவிதை. மூன்று அல்லது … Read more

அத்துமீறல்

மார்க்கி தெ ஸாத் எழுதிய சூழலை விட என் நிலைமை கொஞ்சம் தேவலாம் என்று பலமுறை எழுதியும் யாரும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை.  ஏன் கண்டு கொள்ள வேண்டும் என்பது பற்றியே இந்தச் சிறிய குறிப்பு. புத்தக வெளியீட்டு விழா முடிந்து, இரண்டு பேரிடம் நன்கு செருப்படி வாங்கிக் கொண்டு நான், சதீஷ், செல்வா, ராஜா நால்வரும் வெளியூர் சென்று விட்டோம்.  மறுநாள் இரவு உணவின்போது மீன் தலையை உற்சாகத்துடன் கடித்துத் தின்று கொண்டிருந்த போது … Read more

புத்தக விழா – 1

நாளை (எட்டாம் தேதி, ஜனவரி) மாலை ஐந்து மணிக்கு புத்தக விழாவுக்கு வருவேன். ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். அரங்கு எண் எஃப் 19. வருடா வருடம் தொடர்ந்து எழுதியும் சென்ற ஆண்டும் சில பூமர் எழுத்தாளர்கள் என்னைப் பார்த்ததும் “ஏன் டல்லா இருக்கீங்க சாரு?” என்று கேட்டார்கள். இந்த ஆண்டும் அப்படிக் கேட்டால் மறுநாள் அது பற்றி அவர்களின் பெயர் போட்டு என் ப்ளாகில் எழுதுவேன். அப்படிக் கேட்பதை உருவ கேலி என்றே எடுத்துக் கொள்கிறேன். … Read more