என் புத்தகங்கள்

பல ஆண்டுகளாக என் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று ஒரு புகார் இருந்துகொண்டே இருந்தது.  நானும் அவ்வப்போது பதிப்பாளர்கள் மீது கொஞ்சம் மனத்தாங்கலில் இருப்பேன்.  ஆனால் மளிகைக்கடை, சாப்பாட்டுக் கடை வாசலில் வைத்து விற்றால் கூட இரநூறு பிரதிதான் கணக்கு என்று தெள்ளத் தெளிவாக சொல்கிறது தமிழ் சமூகம்.  நானும் வாங்கினா வாங்குங்க இல்லாட்டிப் போங்க என்ற மனநிலைக்கு வந்து விட்டேன்.  ஆனால் புத்தக விழாக்களில் வாங்குகிறார்கள்.  தினமும் இருநூறு புத்தகங்களில் கையெழுத்துப் போட்டேன்.  அது ஒரு நல்ல … Read more

இருவர்

நேற்று ஒரு நண்பர் கேட்டார், அவர்கள் இருவரையும் நீங்கள் அடிக்கடி பார்ப்பதில்லை; பேசுவதும் இல்லை; இருந்தாலும் எப்படி அவர்கள் இருவரும் உங்கள் மனதில் இத்தனை முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்? இருவரில் ஒருத்தன் சமீபத்தில் கோவா போனான். ஒரு ஆடம்பரமான ஓட்டலில் தங்கினான். அங்கே தங்கியிருந்தவர்களின் உடல் மணம் என் உடல் மணத்தைப் போலிருப்பதை உணர்ந்தான். உடனே எனக்கு போன் பண்ணினான். நாங்கள் இருவரும் gay அல்ல. வெறும் நண்பர்கள்தான். அப்படியும் என் உடல் மணம் தெரிந்திருக்கிறது. இப்படி … Read more

த்ருஷ்டி : திருத்தி எழுதிய பிரதி

ஒரு முன்குறிப்பு:  நேற்று மாலை சுமார் அரை மணி நேரத்தில் த்ருஷ்டியைத் தட்டச்சு செய்து முடித்தேன்.  single sitting.  இடையில் வேறு எதுவும் செய்யவில்லை.  பேய் வேகத்தில் டைப் செய்தேன். கதை பலருக்கும் பிடித்திருந்தது.  பொதுவாக எளிதில் எதையும் பாராட்டி விடாத அராத்து, அய்யனார் விஸ்வநாத், நேசமித்திரன், ராம்ஜி நரசிம்மன் ஆகிய நண்பர்களே பாராட்டினர். குறிப்பாக நான் பூனை அல்ல என்ற பகுதியை அராத்துவும் வித்யா சுபாஷும் சிலாகித்தனர்.  நண்பர்களுக்கு நன்றி.  எப்போதுமே உங்கள் வார்த்தை எனக்கு … Read more