குட்பை மிஷ்கின்!

சைக்கோ making பிடித்திருந்தது. ஆனாலும் போலீஸை அவ்வளவு உபயோகமற்றவர்களாகக் காட்டியதை நம்ப முடியவில்லை. அது படத்தின் நம்பகத்தன்மையைக் கெடுத்தது. ஒரு மோப்ப நாயும் சிசிடிவியும் கொண்டு ஒன்றரை மணி நேரத்தில் பிடித்திருக்கக் கூடிய கொலையாளியை அவன் பல கொலைகள் செய்யும் வரை போலீஸால் பிடிக்கவே முடியவில்லை. படத்தில் நம்பகத்தன்மை இல்லாவிட்டால் படத்தோடு யாரும் ஒன்ற மாட்டார்கள். படம் படு தோல்வி அடைந்ததற்குக் காரணம் அதுதான். ஆனால் இது பற்றியெல்லாம் நான் எதுவும் எழுத விரும்பவில்லை.‘ஆனால் இன்றுதான் சில … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் (தொடர்ச்சி)

எந்த விதத்தில் பழுப்பு நிறப் பக்கங்கள் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இப்போது உங்களுக்குக் கிடைக்கும் ந. சிதம்பர சுப்ரமணியன், சி.சு. செல்லப்பா, க.நா.சு., தஞ்சை ப்ரகாஷ் போன்ற மூத்தவர்களின் புத்தகங்கள் எதுவும் பிழை திருத்தம் செய்யப்படாமல் வருகின்றன. சண்டைக்கு வராதீர்கள் பதிப்பக நண்பர்களே, பெரும்பாலான நூல்களைச் சொல்கிறேன். பிழை திருத்தம் செய்பவர்கள் தமிழில் இல்லை. இதுதான் எதார்த்தம். இதைப் பதிப்பகத்தினர்தான் செய்ய வேண்டும். தமிழ்ப் பேராசிரியர்களை நியமித்தால் அவர்கள் தி. ஜானகிராமனையும் செல்லப்பாவையும் க.நா.சு.வையும் கொன்று விடுவார்கள். … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் சலுகை விலையில்…

https://tinyurl.com/pazhuppubundle நேற்று கூட என் நண்பர் ஒருவர் பதின்பருவத்தினருக்கும் சிறார்களுக்கும் நீங்கள் எழுதினால் என்ன?  உங்களை நான் 25 வயதில்தான் வந்து அடைந்தேன்.  ஆனால் உங்களை ஒருவர் தன் 15 வயதில் அடைய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று அன்புடனும் ஆதங்கத்துடனும் குறிப்பிட்டார்.  நான் அவரிடம் சொன்னேன், என் நாவல்களைத் தவிர என்னுடைய எல்லா நூல்களுமே பதின்பருவத்தினருக்கானதுதான்.  உதாரணமாக, அறம் பொருள் இன்பம், கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங், வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள், நாடோடியின் நாட்குறிப்புகள், கடைசிப் … Read more

பத்தாண்டுகளுக்கு முன்பு…

M&L இதழ்கள் வேண்டாம். அது ஒன்பது இதழ்கள்தான் வந்துள்ளன. அதிலும் ஒருசில இதழ்களில்தான் எனக்குத் தேவையான விஷயங்கள் உள்ளன. அவற்றைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு விட்டேன். https://en.wikipedia.org/wiki/Sulfur_(magazine) மேற்கண்ட இணைப்பில் ஸல்ஃபர் என்ற பத்திரிகை பற்றிய விபரங்களைக் காணலாம். அது போன்ற ஒரு பத்திரிகையை என் அனுபவத்தில் வாசித்ததில்லை. என்னை உருவாக்கிய பத்திரிகைகளில் அது ஒன்று. இன்னொன்று, கூபாவிலிருந்து வாராவாரம் வந்து கொண்டிருந்த Granma என்ற டேப்ளாய்ட் பத்திரிகை. ஸல்ஃபர் 1981இலிருந்து 2000 வரை வந்தது. முதலில் … Read more