புத்தக விழா 6

சிலர் என்னைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார்கள். சிலர் கட்டியணைக்காமல் முத்தமிடுகிறார்கள். சிலர் பாதம் தொட்டு வணங்குகிறார்கள். பாக்யராஜ் என்ற வாசகர் “உங்கள் கன்னத்தைக் கிள்ளிக் கொள்ளவா?” என்று கேட்டார். இதில் ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் இல்லை. இருபாலரும். இது யாவற்றையும் ஒன்றே போல் கருத என்னைப் பக்குவப்படுத்து பெருமாளே என்று வேண்டிக் கொண்டேன். அதிலும் பாதம் தொட்டு வணங்கும் போது என்னிடம் உள்ள ஒருசில ஆசாபாசங்கள் கூட என்னை விட்டு அகல்வதை உணர்கிறேன். என் பாதம் பணிவதை என்னைப் … Read more

புத்தக விழா 5

வரும் 18-ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு சென்னை புத்தக விழாவின் எழுத்தாளர் முற்றம் என்ற அரங்கில் என் எழுத்துலகை அறிமுகம் செய்து வைத்து காயத்ரி பேசுவார். நானும் பேசுவேன். கலந்துரையாடலும் நடக்கும். நேற்று வரை நடந்த எழுத்தாளர் அறிமுக நிகழ்வுகளில் ரெண்டு மூணு பேர் மட்டுமே வந்திருக்கிறார்கள். அதனால் நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கும் என்று உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். இதெல்லாம் எழுத்தாளர்களை அவமானப்படுத்தும் விஷயம் இல்லையா? இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பாரதி புத்தகாலய நண்பர்கள் … Read more

புத்தக விழா 4

பிரமாதமான எலந்த வடை கிடைத்து விட்டது. காதி க்ராமோத்யோகில் வாங்கினாராம். இனி எலந்தவடை வேண்டாம். பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் முரடர்களாகவும் வழிப்பறிக் கொள்ளையரைப் போலவும் நடந்து கொள்கிறார்கள். நேற்று மைலாப்பூரிலிருந்து நந்தனம் போக 150 ரூ வாங்கிக் கொண்டு வாசலிலேயே விட்டுவிட்டுப் போய் விட்டார். வாசலிலிருந்து உள்ளே போக ஒரு கிலோமீட்டர். சிரமப்பட்டு நடந்தேன். 100 ரூ. தூரம். இதில் பாதியிலேயே இறக்கி விட்ட கொடுமை. இன்று சரியாக மாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புவேன். யாரேனும் பைக்கிலோ … Read more