எழுத்தாளர் முற்றம்

நாளை எழுத்தாளர் முற்றத்தில் 7 மணிக்கு என் எழுத்துலகம் பற்றி நேசமித்திரன் பேச இருக்கிறார். தவற விடாதிர்கள். சாருவின் பாலியல், porn writing இலிருந்து சாருவின் எழுத்து எப்படி கலையாக மாறுபடுகிறது – நேசமித்திரனின் பேச்சு இதை மையப்படுத்தி இருக்கும்.

அற்புதம்

கடந்த ஐம்பது ஆண்டுகளில் வாழ்ந்த இசைக் கலைஞர்களில் மேதை என்று சொல்லத்தக்க அத்தனை பேரையும் நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.  பண்டிட் ஜஸ்ராஜ், மல்லிகார்ஜுன் மன்ஸூர், கான் ஸாஹிப் என்று ஏராளமான பெயர்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.  நான் அடிக்கடி சொல்வதுண்டு, தியாகய்யர் திருவையாற்றின் தெருக்களில் ராம பிரானைத் துதித்தபடி பாடி நடந்து சென்ற போது அவர் காலடி பட்ட ஒரு புழுவாகவோ பூச்சியாகவோ நான் இருந்திருக்கிறேன்; அதனால்தான் இசையின் மீது இத்தனை பித்து என்று.  மைலாப்பூர் என்ன அத்தனை உசத்தியா … Read more