நேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்

ஜீனியஸ் என்று நான் மதிக்கக் கூடியவர்களை வெகு அரிதாகவே சந்தித்திருக்கிறேன்.  எழுத்து உலகில் தேவதச்சனை சந்தேகமில்லாமல் ஒரு ஜீனியஸ் என்று சொல்லலாம்.  அந்தக் காலத்து சாக்ரடீஸைப் போல அவரைச் சுற்றி எப்போதும் பத்து இளைஞர்கள் குழுமியிருப்பார்கள்.  ஜீனியஸ்களின் ஒரு முக்கிய அடையாளம், நல்ல உரையாடல்.  தேவதச்சன் குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் பேசுவார்.  பேச்சு என்றால் மேடைப் பேச்சு அல்ல; உரையாடல்.  அதிக பட்சம், நாள் கணக்கில்.  தேவதச்சனுக்கு அடுத்தபடியாக நான் பார்த்த ஜீனியஸ் நேசமித்ரன்.  … Read more

சக்ரவாகம்

ஒரு முதிர்ந்த அல்லது இப்படி சொல்லலாம் ஒரு பழுத்த பெண்ணுடன் முயங்கியிருக்கிறீர்களா? முயங்கலில் அங்கமெங்கும் ஒளிந்துகிடக்கும் அவள் இளமையை தேடித்தேடி வேட்டை நாய்போல் அவள் தேகமெங்கும் நாவால் அலைந்துண்டா? அவ்விளமையைத் தேடிக்கண்டடைந்ததுண்டா? பாவாடை சட்டையிலிருந்து தாவணிக்கு மாறிய காலத்திலிருந்து இன்று வரையான அவளுடைய சரீரத்தின் ஒவ்வவொரு இனுக்குககளையும் பரவசத்தோடு சுவைத்ததுண்டா? அப்படியானால் நீங்கள் தைரியமாக ந. சிதம்பர சுப்பிரமணியனின் “சக்ரவாகம் ” என்கிற சிறுகதைத் தொகுப்பை வாசிக்கத்தொடங்கலாம். அவருடைய “மண்ணில் தெரியுது வானம்” என்கிற புதினத்தை விடுங்கள், … Read more