இந்தப் புத்தக விழாவில் என்னைக் கவர்ந்த புத்தகம்

அந்தப் புத்தகத்தின் பெயர் கடலெனும் வசீகர மீன்தொட்டி. கவிதைத் தொகுப்பு. ஆனாலும் ஒரு நாவலுக்குரிய உள்ளடக்கத்துடன் இருக்கிறது. ஒரு நாவலைப் படிப்பது போல் படிக்க முடிகிறது. சுபா செந்தில்குமார் எழுதிய கவிதைகள். முந்தாநாள் வரை கூட இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. எதேச்சையாக இந்த நூல் என் கவனத்துக்கு வந்தது. மிகுந்த அவநம்பிக்கையுடன் படிக்க முனைந்தேன். ஒரே வாசிப்பில், ஒரே பக்கத்தில், ஒரே கவிதையில் என்னை சரக்கென்று உள்ளே இழுத்துக் கொண்டது. கவிதைகள் கூட இத்தனை வசீகரமாகவும் … Read more

18-ஆம் தேதி சந்திப்பு

ஜெயமோகனின் நண்பர் கடலூர் சீனு 18-ஆம் தேதி சந்திப்பு பற்றி ஒரு முக்கியமான கடிதத்தை எழுதியிருக்கிறார். ஆம், அதில் அவர் சொல்லும் விஷயங்கள் உண்மைதான். எழுத்தாளர் முற்றம் சந்திப்பு இடம் ஆண் பெண் கழிப்பறைகளின் அருகேதான் இருக்கிறது. பொதுவாகவே எழுத்தாளர் என்றால் எல்லா இடத்திலும் அவமானப்படுத்துவதுதானே இயல்பு என்ற சொரணை கெட்ட தோல் வந்து விட்டதால் எனக்கு அது உறைக்கவில்லை. மற்றபடி தினசரி அந்த எழுத்தாளர் முற்றத்தை நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். என்ன இது, கக்கூஸ் பக்கத்தில் … Read more

புத்தக விழா – 9

சென்னை புத்தக விழாவில் உள்ள எழுத்தாளர் முற்றத்தில் வருகின்ற 18-ஆம் தேதி சனிக்கிழமை மாலை சரியாக ஏழு மணிக்கு எழுத்தாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெறுகிறது.  என் எழுத்தை அறிமுகம் செய்து நண்பர்கள் பேசுகிறார்கள்.  நானும் என் எழுத்து பற்றி விரிவாகப் பேசுகிறேன்.  அதில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் உங்கள் விருப்பம், உங்கள் இஷ்டம்.  ஆனால் கலந்து கொள்ளாதவர்களை என் நட்புப் பட்டியலிலிருந்து விலக்கி விடுவேன்.  அதாவது, முகநூல் நட்புப் பட்டியல், வாட்ஸப் பட்டியல்.  அது மட்டும் … Read more

இன்று காலை பத்தரை மணிக்கு மதிமுகம் நேர்காணல்

இந்தப் புத்தக விழாவின் காரணமாக எதற்குமே நேரமில்லாமல் இருக்கிறது. முதல் விஷயம் முதலில். இப்போது காலை பத்தரை மணிக்கு மதிமுகம் தொலைக்காட்சியில் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பாகிறது. அபிநயா ஸ்ரீகாந்த் எடுத்த நேர்காணல். அபிநயா அனுப்பிய செய்தியில் நேர்காணலைப் பார்க்கச் சொல்லியிருந்தார். எனக்கு என் உடல்மொழியோ குரலோ பேசும் முறையோ எதுவுமே பிடிக்காது. இதுவரை என் நேர்காணல் எதையுமே நான் பார்த்ததில்லை. என் அழகான முகத்தையும் வேறு சில அவயவங்களையும் என் எழுத்தையும் தவிர என் சம்பந்தப்பட்ட எதுவுமே … Read more