தஸ்லீமா நஸ்ரினும் உண்மையும்…

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி அவர் பெயரைப் பயன்படுத்துவதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.  சிவங்கரியையும் விடவும் தட்டையாக எழுதுபவர் தஸ்லீமா நஸ்ரின்.  ஆனால் ஆங்கிலத்தில் எழுதுவதால் உலகப்புகழ் பெற்று விட்டார்.  அவருடைய லஜ்ஜாவை நான் குப்பை என்று சொன்னதற்காக தஸ்லீமா, “சாரு நிவேதிதா லஜ்ஜாவை குப்பை என்று சொன்னால் உண்மையும் குப்பை தான்” என்று ட்வீட் போட்டிருக்கிறார்.  நல்லது.  இப்போதுதான் மாதொரு பாகன் பிரச்சினை பற்றி எழுதி விட்டு வெளியே வந்தேன்.  தஸ்லீமாவை எப்படி அணுகுவது என்பதற்கு அவரே … Read more

தொந்தரவு செய்யாதீர்கள்…

மதிப்புமிக்க சாரு அண்ணாவுக்கு, வணக்கம். மாதொருபாகன் குறித்து உங்கள் கருத்தை நான் அறிவேன். ஆனால் என் வாசிப்பனுபவத்தில் அந்த நாவல் என்னை ஈர்த்தது அது குறித்து ஒரு மதிப்புரை எழுதியுள்ளேன். உங்களுக்கு நேரமும் சூழலும் வாய்க்குமெனில் படியுங்கள். ஒரு நாவலை நான் அனுகியவிதத்தில் ஏதெனும் தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள். எனக்கு உதவும். மற்றபடி எக்ஸைல் 2  இன்னும் வாசிக்க வில்லை. வாசித்துவிட்டு உங்களுக்கு எழுதுகிறேன். அதன் வெளியீட்டு விழாவுக்கு என்னால் வரமுடியாமல் போனது எனக்குத் தான் இழப்பு. … Read more

வன்முறைத் தாக்குதல் குறித்து… (2)

நான் திரும்பத் திரும்ப வாசகர் வட்ட நண்பர்களைக் கூட்டத்துக்கு வருந்தி அழைத்துக் கொண்டிருந்தேன்.  எந்த அப்பனாவது மகனிடம் தயவு செய்து வந்து விடு, நீ வருவது எனக்கு ரொம்பப் பெரிய மாரல் சப்போர்ட்டாக இருக்கும் என்று கெஞ்சுவானா?  நான் கெஞ்சினேன். ஆனாலும் வந்தது ரெண்டு பேர்.  சுமார் (சுமார் தான். சரியாக எவ்வளவு என்று எனக்குத் தெரியாது) பத்து நிமிட நேரம் நாலைந்து ரௌடிகள் என் சங்கை அறுக்கப் போவதாக துள்ளிக் கொண்டிருந்த ரகளையை, கலாட்டாவை விடியோ … Read more

நேற்று நடந்த வன்முறைத் தாக்குதல் குறித்து…

இன்று நடைப் பயிற்சிக்குப் போகும் போது கூட முன்னும் பின்னும் பார்த்து பயந்து கொண்டே தான் போனேன்.  உயிருக்கு பயமில்லை.  ஆனால் கண்ட ரவுடிகளிடமும் அடி வாங்கச் சாகக் கூடாது அல்லவா?  நேற்று நான் மட்டும் வீரமாக எங்கே என் சங்கை அறுடா என்று எழுந்து நின்றிருந்தேன் என்றால் சங்கு அறுபட்டிருக்கும்.  என் சங்கை அறுக்க வந்த ஆட்களின் எடை ஒவ்வொருவரும் 120 கிலோ இருக்கும்.  நேற்று நான் பதுங்கினேன்.  அந்த நேரத்தில் பதுங்குவது மட்டுமே நான் … Read more

பெருமாள் முருகன் விவகாரம் (5) : மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன் தன் முகநூலில் நேற்றைய சம்பவம் குறித்து எழுதியது: இன்று புத்தகக் கண்காட்சியில் சாருவுக்கு நடந்தது என்ன? ………………………….. இன்று புத்தகக் கண்காட்சியின் சிற்றரங்கில் எழுத்தாளர்- வாசகர் சந்திப்பில் சாருநிவேதிதா பங்கேற்றார். வழக்கம்போலநிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாசகர் ‘’ எல்லா எழுத்தாளர்களும் பெருமாள் முருகன்விவகாரத்தில் அவருக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் மட்டும் இந்த சமயத்தில் அவரை விமர்சித்துஎழுதியிருப்பது சரியா?’’ என்று கேட்டார். அதற்கு சாரு ‘’ நான் நீண்ட காலமாக பொது அபிப்ராயங்களுக்கு மாற்றானகருத்துக்களைத்தான் கூறி … Read more