5000 ரூ?

அப்பா, 5000 வாங்கும் முடிவை தளர்த்தியிருப்பதால் உயிர்மை இதழில் உங்கள் படைப்புகளை எதிர்பார்க்கலாமா? ராஜு. ஏம்ப்பா தம்பி, நீ என்னை என்ன நக்கல் அடிக்கிறாயா?  உனக்குத் தமிழ் புரியுமா?  அல்லது புரியாதா?  இவ்வளவு சிறிய, எளிய விஷயத்தைக் கூடத் தவறாகப் புரிந்து கொள்ளும் நீ என்னுடைய எழுத்தை எப்படி வாசிக்கிறாய்? நான் ஒரு இளைஞனின் முகம் வாடியதைப் பார்த்தே இனிமேல் கையெழுத்துக்குக் காசு வாங்கக் கூடாது, அது ஹராம் என்று முடிவு செய்தேன்.  ஆனால் உயிர்மையிலும் அப்படி … Read more

புதிய எக்ஸைல் விழா பதிவுகள் (3) : மன்னிக்க வேண்டும் நண்பா!

புத்தகத்தில் கையெழுத்திட 5000 ரூ. கட்டணம் என்ற என் முடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.  நேற்று மூன்று வாசகர்கள்/நண்பர்கள் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள்.  15000 ரூ கிடைத்தது.  மூன்று மாதம் மாத்திரை வாங்க அந்தப் பணம் போதும். ஆனாலும் இனிமேல் என் கையெழுத்துக்குப் பணம் வாங்க மாட்டேன்.  ஏனென்றால், மரத்தில், செடியில் ஒரு இலை வாடி இருந்தால் கூட என் மனம் வாடும் தன்மை கொண்டவன் நான்.  இப்போதைய சாரு அப்படித்தான்.  சிலருக்கு அல்லது பலருக்கு அது … Read more

ஜனவரி 5 : விழா பதிவுகள் (1)

டியர் சாரு , நேற்று, உங்களின்  புத்தக வெளியீட்டு விழாவில் தருண் தேஜ்பாலின்  பேச்சு அத்தனை பேரையும் வசியப்படுத்தி, ஒரு சுய பரிசோதனைக்கு உட்படுத்தியது.  ஒருவர் தமிழில் பேசினால் எப்படிப் புரியுமோ , அப்படியே தருணின் ஆங்கிலம் எனக்குப் புரிந்தது. இவ்வளவு எளிமையாகக்  கூட ஆங்கிலத்தில் பேச முடியுமா? தருணின் பேச்சு கண்டிப்பாகப்  பதிவு செய்யப் பட்டிருக்கும். அந்தப் பேச்சை ஒரு பாடம் என்றே கொள்ளலாம். இந்தியா, கலாசாரம், பண்பாடு,  அரசியல், போலி புனிதம், கல்வி, கருணை, முஸ்லிம் படையெடுப்பு, ஆங்கிலேய … Read more

புதிய எக்ஸைல் : காமராஜ் அரங்கத்தில் 25% விலைக் குறைப்பு

காமராஜ் அரங்கத்தில் இன்று மாலை ஆறரை மணிக்கு நடக்க இருக்கும் புதிய எக்ஸைல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் உங்களுக்காக கிழக்கு பதிப்பகத்தின் பரிசு : 1000 ரூ. விலையுள்ள  புதிய எக்ஸைல் இன்று காமராஜ் அரங்கில் மட்டும் 25% விலைக் குறைப்புடன் ரூ.750/-க்குக் கிடைக்கும்.  தள்ளுமுள்ளைத் தவிர்ப்பதற்காக ஆறு மணிக்கே வந்து நாவலை 750 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளுங்கள்.