பொருள்வெளிப் பயணம் – 3

என் மொழியில் எழுதும் என் சக எழுத்தாளர்கள் என்னைக் குப்பை என்று என்னையே நம்பச் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்த போது மேற்கத்திய எழுத்தாளர்களின் மேற்கண்ட பாராட்டுகளைக் கண்டுதான் நான் தன்னம்பிக்கை கொள்கிறேன். என்னை நானே புகழ்ந்து கொள்வதன் மூலம்தான் நான் என்னை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள முடிகிறது… மேலும் படிக்க: https://www.bittalk.in/chapter/porul-velip-payanam-chapter-3

இருவர் (குறுங்கதை)

காலையில் ஒரு மரண செய்தி.  எப்போதுமே மனிதர்களின் மரண செய்திகள் பாதிப்பதில்லை என்பது போல இதுவும் பாதிக்கவில்லை.  ஆனால் இறந்து போனவர் என் நண்பரின் நெருங்கிய நண்பர் என்பதால் எனக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் கம்மென்று இருந்தேன். மேலும், இறந்து போனவர் இள வயதுக்காரர்.  இன்னும் எத்தனையோ காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர்.  ஆனாலும் நான் செய்தியைக் கேள்விப்பட்டு ஒரு ஜடப் பொருளைப் போலவே இருந்தேன்.  என்னையே நினைத்து எனக்குக் கோபமாக இருந்தது.  ஏன் இப்படி … Read more

எழுத்து என்ன செய்யும்?

என் வாழ்வில் கல்லூரி நாட்களின் இறுதியில்தான் சாரு எனக்கு அறிமுகமானார். ஆனால் அவரை யாரும் எனக்குப் பரிந்துரைத்ததில்லை. வாழ்வில் ஏதோ ஒரு அற்புதம் நிகழ்ந்தது போல அவருடைய யூடியூப் உரைகளை நான் கேட்க நேர்ந்தது. அப்போது இருந்த என் மனநிலை இது: உலகம் இலுமினாட்டிகளால் ஆளப்படுகிறது; அதன் தாக்கம்தான் ”என்ன, உலகம் இப்படிக் கெட்டுப்போய்க் கிடக்கிறது” என்று தோன்றியதெல்லாம். மனதில் என்னென்னவோ குழப்பங்கள்… ஆனால் அந்தச் சூழ்நிலையில் என்னுடைய நிலை எனக்கே பரிதாபமாகத்தான் இருந்தது. நான் படிக்கிறேனா … Read more

ஒரு குட்டி மாய யதார்த்தவாத அல்லது சயன்ஸ் ஃபிக்‌ஷன் கதை!

ஒரு பேரழகி.  இருபத்து மூன்று வயது.  என் தீவிர வாசகி.  சில மாதங்களுக்குப் பிறகு ஐ லவ் யூ என்று ஆரம்பித்தாள்.  இந்த முறை நான் சிக்கவில்லை.  நானும் எஸ்.ரா., ஜெமோ இருவரையும் எவ்வளவு பார்க்கிறேன்?  பதிலுக்கு  அவளிடம் “நான் உன்னை என் பேத்தி மாதிரி நினைக்கிறேன் குட்டி, அப்படிப்பட்ட தாத்தா பேத்தி உறவு நமக்குள் எப்போதும் நீடிக்கட்டும், என்ன?” என்று ஒரு போடு போட்டேன்.  அவளும் “சரி தாத்தா” என்று சொல்லி விட்டாள். தெ எண்ட். … Read more

நான்தான் ஔரங்கசீப்…லஃபீஸ் ஷஹீதின் குறிப்பு

பின்வரும் பதிவு முகநூலில் என் நண்பர் லஃபீஸ் ஷஹீத் எழுதியிருப்பது. நான்தான் ஔரங்கசீப்… இந்த மாதம் முப்பதாம் தேதியிலிருந்து bynge.in இல் தொடர்ந்து வெளிவரும். அதற்கு ஒரு தொடக்க அறிமுகமாக லஃபீஸ் ஷஹீதின் இந்தக் குறிப்பு பயன்படலாம். சூபி ஞானி ஷர்மத் ஷஹீத் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முகலாயர் காலத்தில் வாழ்ந்தவர். ஆனால் திகம்பரமாக திரிந்தவர். இவர் அவுரங்ஸீப் ஆலம்கீர் மற்றும் தாராஷிகோ இருவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் தாராஷிகோ பக்கம் இருந்ததால் அவுரங்ஸீப் இனால் தூக்கில் ஏற்றப்பட்டார். … Read more

ஒன்றரைக் கதவு

வாசிப்பது ஒரு தெரப்பி என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.  அதேபோல் எழுதுவதுமே தெரப்பிதான் என்பதை சமீபத்தில் அறிந்து கொண்டேன்.  சுமார் இருபத்தைந்து நாட்களாக எனக்கு ஒரு மன உளைச்சல்.  மன உளைச்சல் என்றால் என்ன?  படுத்தால் தூக்கம் வராமல் எண்ணங்கள் புரட்டிப் போடுகிறதா?  அதுதான் மன உளைச்சல்.  இதோ பாருங்கள், நாலு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டிய ஆள் மூணு மணிக்கே எழுந்து விட்டேன்.  இதுதான்.  ஆனால் இன்று இரவிலிருந்து நல்ல தூக்கம் வரும்.   இதை எழுதி … Read more