க்ளப் ஹவுஸ் உரையாடல்

வரும் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூலமாக க்ளப் ஹவுஸில் உரையாட இருக்கிறேன். சக எழுத்தாளர்கள் பற்றிய கேள்விகள் இருந்தால் கேட்க வேண்டாம். தமிழ் சினிமா பற்றிய கேள்விகளுக்கும் பதில் சொல்ல மாட்டேன். https://www.clubhouse.com/join/zero-degree-publishing/hqen5nVt/xkjKqWlD?fbclid=IwAR2WShlslmTIBfhuAnJkFGeGjglBtqE75PhZodwNfcY-Vkp4HwY3A1Z045k

சமகாலத் தமிழ் இலக்கியச் சூழல்

ஜெயமோகனின் வாசகர்கள் என்றுதான் இதற்கு நான் தலைப்பிட்டிருக்க வேண்டும். இருந்தாலும் அந்தத் தலைப்பு பலவித ஹேஷ்யங்களைக் கொடுக்கக் கூடும் என்பதால் இப்படி ஒரு தலைப்பு வைத்தேன். செய்வதற்கு எனக்குப் பல வேலைகள் உள்ளன. இரவு பகலாகக் கண் விழித்து ஔரங்கசீப் எழுதிக் கொண்டிருக்கிறேன். முந்தாநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு சீனியை அழைத்தேன். மிரண்டு போனார். இதுதாங்க, ராப்பகலா எழுதுறதுங்கிறது என்றேன். பழைய ராணுவ ஒழுங்கு எதுவும் இல்லை. நாவல் எழுதும்போது நேர ஒழுங்கு உட்பட எந்த ஒழுங்கையும் … Read more

எஃபத்தா : சிறுகதை : வளன்

“இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு, காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமானவரிடம் ‘எஃபத்தா’ அதாவது ‘திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது.” (மாற்கு 7: 34-35) கண்ணுக்குத் தெரியாத ஒரு கோடு டார்ச்செஸ்டர் பகுதியை இரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறது. இங்கு வாழும் யாவருக்கும் இது தெரியும். நகரின் கிழக்குப் பகுதி நல்ல டார்ச்செஸ்டர் எனவும், மேற்குப் பகுதி தீய டார்ச்செஸ்டர் எனவும் அறியப்படுகிறது. இது எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்றால் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை வைத்து. … Read more

அக்கறையின்மை

நான் இப்போது எழுதுவதைப் படித்துக் கோபம் அடையாதீர். கோபம் கொண்டால் நஷ்டம் எனக்கு இல்லை. உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவே என் நேரத்தை செலவழித்து இதை எழுதுகிறேன். இது பற்றி முன்பே எழுதியிருந்தேன். இந்த விவரம் கிடைக்கும் லிங்க்கும் கொடுத்திருந்தேன். ஆனால் யாருமே – ஆம், யாருமே – இது பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் பாட்டுக்கு உங்கள் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால் நான் என்ன வேலையற்றவனா? ஏற்கனவே லிங்க் கொடுத்தும், வழி என்ன என்று சொல்லியும் … Read more

மறக்க முடியாத கதை

வளன் அரசு என் எழுத்தில் வளர்ந்தவன்.  என்னை அப்பா என அழைப்பவர்களில் முதன்மையானவன்.  அவனுடைய பள்ளிப் பருவத்திலிருந்து அவனை நான் அறிவேன்.  இப்போது ஒரு நல்ல படைப்பாளியாக வளர்ந்து வருகிறான்.  பின்வரும் சிறுகதை என் மனதை வெகுவாகக் கவர்ந்தது.  எந்த இலக்கியப் பாசாங்குகளும் இல்லாத கதை.  மறக்கவே முடியாத கதை.  இதில் வரும் ரெனியையும் மறக்க முடியாது.  ஜெரோமையும் மறக்க முடியாது.  ஜெரோம் சைத்தானின் குறியீடு எனவும் ரெனீ உன்னதங்களின் குறியீடு எனவும் புரிந்து கொள்கிறேன்.  ஆனால் … Read more