சிறுகதை நேரம்: ஃபாத்திமா பாபு: மாயமான் வேட்டை

நேற்று இரவு ஒன்பது இருபதுக்கு க்ளப் ஹவுஸில் ஃபாத்திமா பாபுவின் சிறுகதை நேரம் தொடங்கியது.  ஒன்பது முப்பதுக்குக் கதையை வாசிக்க ஆரம்பித்தார்.  நேற்றைய கதை என்னுடைய மாயமான் வேட்டை.  பொதுவாக தமிழ்ச் சூழலில் கதையையோ கவிதையையோ வாசித்துக் கேட்பது எனக்கு ஆகாத காரியமாக உள்ளது.  காரணம், நான் அல்ல.  வாசிப்பவர்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை.  அதிலும் அந்தத் துறையில் பிரபலமாக இருப்பவர்கள் வாசிப்பதைக் கேட்கவே சகிக்கவில்லை.  கவிஞர்களின் கவிதை வாசிப்பும் கொடுமை.  ஆனால் ஐரோப்பிய மொழிகளில் இது போன்ற … Read more

அராத்துவின் புதிய பன்றி கவிதை

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினால் ஸ்ரீராமுக்கு ஒரே ஜாலிதான் போல. நெரூதாவின் நாய்க் கவிதையை எனக்கு அனுப்பினார். மணி மாலை 4.46. என் பொருட்டு எழுதியதாகத் தெரியவில்லை. உடனே அராத்துவுக்கு அனுப்பி இதற்குப் பன்றி கவிதை தேவை என்று எழுதினேன். 5.02க்கு அவர் பன்றி கவிதை அனுப்பினார். எனக்கு நகுலனும் சுந்தர ராமசாமியும்தான் ஞாபகம் வருகிறார்கள். இப்படி எழுதுவதற்கு எத்தனை நாய்க் கவிதை வரப் போகிறதோ, பயமாக இருக்கிறது. சும்மா கிடந்த சீனி நெரூதா புண்ணியத்தால் பெரும் கவியாகி … Read more

ஃபாத்திமா பாபு குரலில் மாயமான் வேட்டை- இன்று இரவு

https://m.facebook.com/story.php?story_fbid=4312954222087633&id=100001192933610&sfnsn=wiwspwah மேற்கண்ட சுட்டியின் மூலம் இன்று இரவு ஒன்பது இருபதுக்கு இணைந்தால் ஃபாத்திமா பாபுவின் குரலில் மாயமான் வேட்டை கதையைக் கேட்கலாம். நானும் கலந்து கொள்கிறேன்.

பேரரசனோடு பழகுதல்

ஒரு சிறுபத்திரிகையைச் சேர்ந்த நண்பர்.  இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம்.  பதினைந்து ஆண்டுகளாக அந்தப் பத்திரிகையை நடத்தி வருகிறார்.  கண்களில் ஒத்திக் கொள்வது போல் இருக்கும்.  எந்த கோஷ்டியையும் சேராதவர்.  எனக்குத் தொடர்ந்து தன் பத்திரிகையை அனுப்பி வருகிறார்.  அவருக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமே என்று பதினைந்து ஆண்டுகளாகவே யோசித்து வருகிறேன்.  கைம்மாறு என்ன கைம்மாறு?  கைக்காசையும் நண்பர்களிடமிருந்து பணம் திரட்டியும் பத்திரிகை நடத்தி வருபவருக்கு ஒரே ஒரு தேவைதான் இருக்க முடியும்.  அந்தத் தேவையை … Read more