விநாயகர் சதுர்த்தியும் புத்திஜீவிகளும்… (2)

அபிலாஷ் என் நெருங்கிய நண்பர். பிரச்சினை என்னவென்றால், எந்த இடத்தில் என்ன பேசுவது என்று தெரியாது. ஒரு ஹிந்துப் பண்டிகை தினத்திலா இதைப் போய் பேசுவது? அதுவும் நாடு இப்போது இருக்கும் நிலையில்? பண்டிகை என்பது கொண்டாடுவதற்குத்தானே? நான் காலையிலிருந்து கொழுக்கட்டை சாப்பிடுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அங்கே வந்து ரகளை செஞ்சால் நான் எப்படி இனிக்க இனிக்கக் கொழுக்கட்டை சாப்பிடுவது? சரி, பகுத்தறிவுவாதிகளே, நீங்கள் எப்போது கொழுக்கட்டை தருவீர்கள்? கார்ல் மார்க்ஸ் பிறந்த தினத்திலா?

ஒரு விளக்கமும் என் பதிலும்… (2)

சாரு, அதன் பொருள் விநாயகரை உடைக்க வேண்டும் என்பதல்ல. விநாயகருக்குள் இருப்பவர் புத்தர் என்பதே. விநாயகர் ஒரு பூர்வ புத்தர். இது ஒரு உருவகம் மட்டுமே. இது அபிலாஷ். புத்திஜீவிகளின் பிரச்சினையே இதுதான். ஒரு குழந்தை ஒரு பொம்மைக்குத் தலை சீவிப் பொட்டிட்டு புடவை கட்டி சோறு ஊட்டுகிறது. நான் புத்திஜீவி. நான் என்ன செய்ய வேண்டும்? அந்தக் குழந்தையிடம் சென்று “ஏய் முட்டாள் குழந்தையே, இது ஒரு உயிரில்லாத பொம்மை. இதற்கு உயிரில்லை, இது ஒரு … Read more

விநாயகர் சதுர்த்தியும் புத்திஜீவிகளும்… (1)

அபிலாஷ் ஒரு படம் போட்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லியிருக்கிறார். விநாயகர் சிலையை இரண்டாக உடைத்துக் கொண்டு புத்தர் தோன்றும் படம். இதைப் பார்த்தவுடன் ஒரு ஹிந்துவுக்கு என்ன தோன்றும்? இப்படிப்பட்ட நண்பர்கள்தான் மோடியை வளர்த்து விடுகிறார்கள். தங்கள் அடையாளத்தை மறந்து விட்டு இருந்த ஹிந்துக்கள் தங்கள் அடையாளத்தைத் திரும்பப் பெறவும் ஒருங்கிணைப்பு செய்து கொள்ளவும் அபிலாஷ் போன்ற நண்பர்களின் இது போன்ற காரியங்களே உத்வேகம் அளிக்கின்றன. கிறித்தவக் கல்லூரிகளில் சென்ற தேர்தலில் ராகுலுக்கு வாக்களிக்கச் சொல்லி … Read more

பாபாகாவின் புதிய நாவல்

பாபாகா.  பாபா என்பதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும்.  கா என்பதை காகிதம் என்பதில் வரும் கா மாதிரி உச்சரிக்காமல் கானம் என்பதை உச்சரிப்பது போல் சொல்ல வேண்டும்.   கவர்மெண்ட் என்பதில் வரும் ஜி.  இவருடைய முதல் நாவல் உபுகு. உபுகு என்பது ஜியாமெட்ரிக் சகுனங்கள்.  உடனடியாக எனக்கு தாமஸ் பிஞ்ச்சோன் ஞாபகம் வருகிறார்.  இப்படி எதைப் படித்தாலும் ஒரு மேற்கத்திய எழுத்தாளர் ஞாபகம் வருவதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது.  அதற்காக ஒரு … Read more

மஞ்சள் விநாயகர்

மனிதனின் கற்பனை உச்சங்களில் ஒன்று, விநாயகர். எப்போதும் போல் நேற்று இரவும் பத்து மணிக்கு நான் உறங்கப் போய் விட்டேன். நள்ளிரவு ஒரு மணிக்கும் அவந்திகாவின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்து பார்த்தால் ஹாலில் இந்த மஞ்சள் விநாயகர். எங்கள் வீட்டில் இரண்டு பால்கனிகள் உள்ளன. ஒன்றில் பூச்செடிகள். இன்னொன்றில் மூலிகை. என்னவோ தெரியவில்லை, காய்கறிகளே வருவதில்லை. பூந்தோட்டத்தில் பறித்தது அந்த இரண்டு பூக்களும். கண்கள் என்ன என்றேன். மிளகு என்றாள்.

டச்வுட்… டச்வுட்… டச்வுட்…

அமிர்தம் சூர்யா இன்று முகநூலில் ஒரு பதிவு போட்டிருந்தார்.  அதைப் படித்து விட்டு வெகுண்டு எழுந்து இதை எழுதுகிறேன்.  என்னை புத்தியில் அழகு என்று போட்டதுதான் விவகாரம்.  புத்தியை விடுங்கள், ஒரு பக்கம் கிடக்கட்டும்.  பௌதிக அழகு பற்றிக் கொஞ்சம் பேசுவோம்.  இந்தப் பெண்கள் இருக்கிறார்களே, அவர்களை இந்த விஷயத்தில் கொஞ்சம் கூட நம்பாதீர்கள்.  புத்திதான் முக்கியம், புற அழகெல்லாம் சுத்த வேஸ்ட் என்பார்கள்.  அத்தனையும் பச்சைப் பொய்.  ஒவ்வொரு பெண்ணும் படு முக்கியத்துவம் கொடுப்பது புற … Read more