Living with men: காயத்ரி. ஆர்

காட்சி 1: என் வாரிசுகள் இரண்டும் காலையில்… நம்பர் 1: டேய்! அந்த பெட்ரோ கார்ட வச்சுட்டு போ. எனக்கு வேணும். நம்பர் 2: உனக்கு எதுக்கு? தண்டமா தான வீட்டுல இருக்க? நான் காலேஜ் போக கேக்கறேன். நீ ஊர் சுத்த கேக்கற. நம்பர் 1: மரியாதையா வச்சுட்டுப் போ, நான் கெட்டவனா மாறதுக்குள்ள. நம்பர் 2: Seriously? நீ மாறணும். நான் கெட்டவனேதான். போடா …….. நம்பர் 1: அம்மா…இவன் ஓவரா பேசறான். வந்தேன்னு … Read more

சில குறிப்புகள்

ந. வெங்கடசுப்ரமணியனின் மரம் பற்றிய குறிப்பை இங்கே பகிர்ந்ததற்கு மிகவும் நெகிழ்ச்சியடைந்து எழுதியிருந்தார். மனிதர்களை நேசிக்கவும் எழுதவும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் மரங்களையும் மரத்தில் வாழும் ஜீவராசிகளையும் ரசிப்பதற்கும் போற்றுவதற்கும் யார் இருக்கிறார்கள். மரத்தையும் பிராணிகளையும் நேசிப்பவரை நான் நேசிக்கிறேன்… பூனை உணவு தீர்ந்து விட்டது. முடிந்தவர்கள் அனுப்பி வைக்கலாம். எனக்கு எழுதினால் விலாசம் அனுப்புகிறேன். மாதம் தோறும் பூனை உணவு அனுப்பும் நண்பருக்கு உடல் நலமில்லாமல் போய் விட்டது. அதனால் எழுதுகிறேன். இப்போது bynge.in … Read more

வாழ்ந்து பார்த்த தருணம்… (மரம் மரமாய் இருக்கிறது…)- 145

நண்பர் ந. வெங்கடசுப்ரமணியன் முகநூலில் தொடர்ந்து இது போல் எழுதுகிறார். இது 145ஆவது எழுத்து. சலனமில்லாமல் உட்சலனங்களை வார்த்தைகளில் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். இன்னதுதான் என்று இல்லை; எதை வேண்டுமானாலும் எழுதுவார். ஆனால் அது ரசிக்கத் தகுந்தபடி இருக்கும். நேற்று மரம் பற்றி எழுதியிருந்தார். நொச்சி மரம். கீழே அவர் முகநூலில் எழுதிய 145ஆவது பதிவு: ஏன்டா மரம் மாதிரி அப்படியே அசையாம நின்னுகிட்டே இருக்க, கேட்ட கேள்விக்கு ஏதாவது பதில் சொல்லித் தொல, என் வாழ்நாள் முழுவதும் … Read more

பொதுஜனங்களுக்கு ஓர் அன்பான அறிவிப்பு!

கரடி வேஷம் போட்டால் கடிக்காமல் இருக்கலாமா? அன்பான அறிவிப்பு தலைப்பை விட இதுதான் இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கும். பரவாயில்லை. மேலே செல்வோம். நான்தான் ஔரங்கசீப்… நாவல் இந்துத்துவர்களுக்குப் பிடிக்க வாய்ப்பு இல்லை. நாவலில் பாதிக்கு மேல் அல்லது இறுதிப் பகுதியில் முஸ்லிம்களுக்கும் பிடிக்காமல் போகலாம். அந்த இடம் இன்னும் வரவில்லை. இப்போது இந்துத்துவர்கள் நாவலைத் திட்டி ஒரு ஸ்டார் போடுகிறார்கள். அதனால் ரேட்டிங் ஐந்து நட்சத்திரத்திலிருந்து குறைந்து 4.4 வந்து விட்டது. ஸீரோ ரேட்டிங் … Read more

மணிகே மகே ஹித்தே

இன்று என் நெருங்கிய சிநேகிதி இந்தப் பாடலை எனக்கு அனுப்பி கேட்டுப் பாருங்கள், இதுதான் இப்போதைய ட்ரெண்ட் என்று சொல்லியிருந்தார். நான் எனக்குப் பிடித்த பாடல்களை முகநூலில்தான் அதிகம் எடுத்துக் கொடுப்பதுண்டு. அதனால் அவர் சில பல மாதங்களுக்கு முன்பே – இந்தப் பாடல் பிரபலம் ஆவதற்கு முன்பே இது பயங்கரமாக பிரபலம் ஆகும் என்று சொல்லி முகநூலில் பகிர்ந்து இருந்தேன். தம்பி பார்க்கவில்லை போல. எனக்கே அனுப்பியிருக்கிறார். சிங்களப் பாடல். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். … Read more