ஒண்ணு ரெண்டு மூணு… இருபத்து மூணு

ஒண்ணு ரெண்டு மூணு என்ற பதிவின் தொடர்ச்சி இது.  இன்னும் ஒரு மாத காலத்துக்கு என் வாழ்வில் எப்போதும் இருந்து வரும் ஒழுங்கு இருக்காது.  உதாரணம் சொல்ல வேண்டுமானால், எப்போதும் போன் வந்தால் எடுத்து விடுவேன்.  எடுக்க முடியாவிட்டாலும் ஒரு மணி நேரத்தில் திரும்ப அழைத்து விடுவேன்.   அம்மாதிரி தினப்படி ஒழுங்கு ஒரு மாதம் இருக்காது.  ஔரங்ஸேப் நாவலை பதிப்பகத்திடம் கொடுக்க வேண்டும்.  இப்போதைய வேகத்தில் செய்தால் பதிப்பகத்திடம் கொடுக்க ஒன்றரை ஆண்டு ஆகும் என்பது எனக்கு … Read more

இரண்டாம் கடவுள்

பற்றை விடு விடுதலை பெறு ததாகதர் கண்ட ஞானம் தேன்சிட்டு சொன்னது ஒரு ஞானம் யாரும் யாரையும் முழுமை செய்ய முடியாது என் பங்குக்கு நானுமொரு ஞானம் சொன்னேன் என் ஆவியை வார்த்தையாக்கித் தருகிறேன் இலக்கியத் திருட்டு என்றது தேன் சிட்டு விவிலியத்தின் நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம் அப்படியானால் நான் இரண்டாம் கடவுள் என்றேன்

சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் ஒரு கவிதை

தமிழ்நாட்டில் வசிப்பதாலும் நான் பிரபலமாகித் தொலைந்து விட்டதாலும் அடக்கி வாசிக்கிறேன். சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் பின்வரும் கவிதையைப் பாருங்கள். தமிழ்நாட்டில் இப்போது எங்கு பார்த்தாலும் ப்யூகோவ்ஸ்கி ப்யூகோவ்ஸ்கி என்கிறார்கள். நான் இப்படி ஒரு கவிதை எழுதினால் என் பேரைச் சொல்வார்களா? கவிதைத் தலைப்பு Fuck Fuck she pulled her dress off over her head and I saw the panties indented somewhat into the crotch. it’s only human. now we’ve … Read more

நீண்ட நாள் தோழியின் இறுதி சந்திப்பு

அன்றைய தினம் Ten Downing பப்பில் சந்திக்கலாம் என்று திட்டம் மினி ஸ்கர்ட் அணிந்திருந்தாள் எட்டு மணியிலிருந்து ஒன்பதுக்குள் நாலு ரவுண்ட் அடித்தாள் நான் அப்போது குடிப்பதை நிறுத்தியிருந்ததால் கோக் குடித்தேன் ஆடலாமா என்றாள் கோக் குடித்து விட்டு ஆட உற்சாகமாக இல்லையென்றாலும் அவள் சுழன்று சுழன்று ஆடினாள் என்னைத் தவிர அத்தனை பேரும் இளைஞர்கள் என்பதை கவனித்தேன் புரிந்து கொண்டாற்போல் ’இளைஞர்கள் அலுப்பூட்டுகிறார்கள்’ என்றாள் சிரித்து வைத்தேன் எங்கிருந்தோ வந்த பத்திரிகையாளன் ஒரு புகைப்படம் எடுத்துக் … Read more

சூர்யதாரையை விழுங்கியவனைப் பற்றிய குறிப்பு

சூர்ய தாரையின் ஒரு துளியை ருசித்து விழுங்கினேன் அதன் பிறகு நடந்ததோர் அதிசயம் நினைத்த நேரத்தில் பறக்க முடிந்தது நினைத்த நேரத்தில் தேவர்களுடனும் கடவுள்களுடனும் தீர்க்கதரிசிகளுடனும் பேய் பிசாசுகளுடனும் பேச முடிந்தது பெண்கள் என்ன நினைக்கிறார்களென புரிந்து கொள்ள முடிந்தது மிருகங்களோடும் உறவாட முடிந்தது பசி மறந்தது உறக்கம் தொலைந்தது துக்கம் சந்தோஷம் கண்ணீர் சிரிப்பு மரணம் ஜனனம் விருப்பு வெறுப்பு வலி சுகம் இன்பம் துன்பம் நல்லது கெட்டது மலம் மூத்திரம் சந்தனம் பன்னீர் தென்றல் … Read more

ப்யூகோவ்ஸ்கியின் கவிதை வாசிப்பு

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதையை அறிமுகப்படுத்தினான் நண்பன் அப்படி ஒன்றும் பெரிதாக ஈர்க்கவில்லை ஆனாலும் அவனிடம் ஒரு வசீகரம் இருந்ததை உணர்ந்தேன் அவன் முகமே ஒரு வசீகரம் அவன் குடி ஒரு வசீகரம் ப்யூகோவ்ஸ்கியின் கவிதை வாசிப்பு என்றால் மேடையில் ஒரு கலயம் இருக்க வேண்டும் அதி குடியால் வாந்தி வரும்போது உதவும் கலயம் இனிமேல் குடித்தால் சங்குதான் என்றார் மருத்துவர் சரியென்று சொல்லிவிட்டு மீண்டும் குடித்தான் ப்யூக் அதற்குப் பிறகும் பத்து ஆண்டுகள் … Read more