சென்னையில் ஒரு லிட்ரரி சலோன்…

1970களில் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியின் இல்லத்தின் மொட்டைமாடியில் அவர் காகங்கள் என்ற பெயரில் மாதாமாதம் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்தினார். அது அப்போது இலக்கிய வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்ட ஒரு செய்தி.  நான் 1978இல் தில்லி சென்றேன்.  அப்போது நாகர்கோவிலிலிருந்து வந்து கொண்டிருந்த கொல்லிப்பாவை என்ற இதழில் “காகங்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது என் கனவுகளில் ஒன்று” என்று ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.  நிவேதிதா, புதுதில்லி என்ற பெயரில் வந்திருந்தது அந்தக் கடிதம்.  பிறகு கொல்லிப்பாவையுடன் பெரும் … Read more

ஒரு வேண்டுகோள்

ஐசிஐசிஐ வங்கி மூலம் பணம் செலுத்தியவர்களின் பெயரை அந்த வங்கி தெரிவிப்பதில்லை. அதனால் பணம் செலுத்தியவர்கள் தங்கள் பெயரையும் முகவரியையும் எனக்குத் தெரியப்படுத்தினால் நல்லது. charu.nivedita.india@gmail.com

சிவந்த வானம்

அநேகமாக பணம் அனுப்பியவர்கள் அனைவரும் தங்கள் பெயரைத் தெரிவித்து விட்டார்கள். நன்றி. நான்தான் ஔரங்ஸேப்… இறுதி கட்ட பிழை திருத்தம் செய்து விட்டேன். நாளை டம்மி காப்பி எடுத்துப் பார்த்து விட்டு அச்சுக்குக் கொடுக்க வேண்டும். இன்னும் இரண்டொரு நாளில் அச்சுக்குப் போய் விடும். சிறப்புப் பதிப்பு வெளியீட்டுத் திட்டத்தில் இணைய விரும்பும் நண்பர்கள் புதன்கிழமைக்குள் பணம் அனுப்பி பெயரையும் தெரிவியுங்கள். இந்தத் தொகை அனைத்தும் இப்போதைய சீலே பயணத்துக்குத்தான் பயன்படும். வீசா கிடைத்தால் பாரிஸ் போய் … Read more

நோபல் பரிசுக்குப் பரிந்துரை…

My beloved Charu, பா. வெங்கடேசன் பற்றிய உங்கள் குறிப்பும் ஆசையின் கட்டுரையும் படித்தேன்.  உங்கள் கருத்தை மதிக்கிறேன்.  பா. வெங்கடேசனை உடனடியாக வாங்கிப் படிக்கிறேன்.  நீங்கள் சிபாரிசு செய்யும் எழுத்தாளர்கள் பலரையும் படித்து வருகிறேன்.  எதுவுமே ஏமாற்றியதில்லை.  ஆசையின் அபிப்பிராயம் பற்றி.  தாண்டவராயன் கதை நோபல் பரிசுக்கு உரியது என்று சொல்லியிருக்கிறார்.  அப்படியே ஆக வேண்டும்.  ஆனால் எனக்கு ஒரு கேள்வி.  ஆசையோ நீங்கள் வியந்தோதும் பா. வெங்கடேசனோ நீங்கள் எழுதிய ராஸ லீலாவைப் படித்திருப்பார்களா?  … Read more

மீண்டும் படப்பிடிப்பு

வரும் புதனிலிருந்து மீண்டும் ஆவணப் படத்துக்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. ஆடை அலங்காரத்தில் நான் முன்னோடி என்பது என்னை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியும். லினன் சட்டையும் லினன் கால் சராயும் மோஸ்தருக்கு வரும் முன்பே அதை அணிந்தவன் நான். இருபது ஆண்டுகளுக்கு முன்பு. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக லேசான மஞ்சள் கலந்த வெள்ளை நிற (வெளிர் சந்தன நிறம் என்று சொல்லலாம்) டெர்லின் துணியில் கால்சராய் அணியும் பழக்கம் இருந்தது. மேட்டுக்குடி மைனர்களிடையே. நடிகர் ரவிச்சந்திரன் அதைப் … Read more

ம்…

இன்று காலை ஆறரை மணிக்கு ஷுகர் டெஸ்டுக்கு ரத்தம் கொடுக்க பரிசோதனைச் சாலைக்குப் போனேன்.  ரத்தம் கொடுத்து விட்டு உடனடியாகக் காஃபி குடித்தேன்.  காலை உணவு கோதுமை உப்புமா சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ரத்தம் கொடுத்தேன்.  மாலை முடிவு தெரிந்தது.  ஷுகர் இல்லை.  ஆனால் ஷுகர் மாத்திரையை நிறுத்தினால் ஷுகர் ஏறுகிறது.  ஷுகரைக் கட்டுப்படுத்த காலையில் கோமிய மருந்தும் இரவில் அலோபதி மருந்தும் எடுத்துக் கொள்கிறேன். இன்று இரவு நண்பர்களுடன் பேசிக் … Read more