மியாட் மருத்துவமனைச் சாவுகள்!

மியாட் மருத்துவமனையில் நடந்தது தனியார் மருத்துவமனைகளின் மனிதாபிமானமற்ற வியாபாரப் போக்குக்கு ஒரு உதாரணம். தங்கள் மருத்துவமனையின் விளம்பரத்துக்காகக் கோடி கோடியாய் செலவு செய்யும் அதன் உரிமையாளர் கொஞ்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி வைத்திருக்கக் கூடாதா? மேலும், ஐசியூ போன்ற வார்டுகளை தரைத் தளத்திலா வைப்பார்கள்? அந்த மருத்துவமனையின் அஜாக்கிரதையினால் 18 நோயாளிகள் இறந்துள்ளனர். இயற்கைப் பேரிடர் அல்ல; வெறும் அஜாக்கிரதை. இவ்வளவுக்கும் மியாட்டின் விளம்பர சினிமா வராத சினிமா கொட்டகையே கிடையாது. அந்த ஆடம்பர விளம்பரத்தைப் பார்த்தால் … Read more

ரஜினியின் பத்து லட்சம்!

வெள்ள நிவாரண நிதிக்காக ரஜினிகாந்த் பத்து லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்திருப்பதாக அறிந்தேன். மனம் நொந்தது.  மற்ற ஹீரோ நடிகர்கள் வாயே திறக்கவில்லை.  கமல் வாயைத்தான் முன்னமே பார்த்தோம்.  ரஜினியின் பத்து லட்சம்.  அவரா, சோத்துக் கையால காக்கா விரட்ட மாட்டார்பா என்று ஒரு பழமொழி உண்டு.  ரஜினியின் சம்பளம் இருபது கோடியா, முப்பது கோடியா?  நன்கொடை பத்து லட்சம்.  ஆன்மீகம் எல்லாம் சொல்லிக் கொடுத்தது இவ்வளவு தானா மிஸ்டர் ரஜினிகாந்த்?

எங்கள் பொம்மையைப் பறித்து வீசி விடாதீர்கள் மிஸ்டர் கமல்ஹாசன்!!!

கங்கையில் மிதக்கும் பிரேதங்களைப் போல் சென்னையே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.  இந்தத் துயரமான வேளையில் கமல்ஹாசனின் செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எப்போதுமே எனக்கு ஒரு சம்சயம் உண்டு.  தமிழ்நாட்டில் மட்டும் இலக்கியம் படித்தவர்கள் ஏன் கொஞ்சமும் சுரணை உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்?  படிக்காதவர்களே தேவலாம் என்கிற அளவுக்கு இருக்கிறது படித்தவர்களின் பேச்சும் நடத்தையும்.  மழைக்கு முன்பு நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொள்ள நேர்ந்தது.  பொதுவாக சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள … Read more