ஏன் எனக்கு அறிவே இல்லை? – ஒரு சுய பரிசோதனை

கணித மேதை ராமானுஜன் பற்றிய பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை ரொம்ப நன்றாக இருப்பதாக பி.ஏ. கிருஷ்ணன் சொல்லியிருந்ததால் உடனே அந்தக் கட்டுரையைப் படிக்கப் போனேன்.  ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை.  தமிழில் எழுதப்பட்ட கட்டுரைதான்.  சரி, நமக்குத்தான் கணிதம் என்றால் ஒரு எழவும் புரியாதே என்று கீழே கீழே வரிகளைத் தள்ளிக் கொண்டு போனால் கடைசியில் நாகேஸ்வர ராவ் பூங்கா கணக்கு என்று ஒரு தலைப்பு இருந்தது.  பூங்கா என்றால் நல்ல வார்த்தைதான்.  ஆனால் அதோடு கணக்கு … Read more

முட்டாளின் பதில் தொடர்கிறது… (அநேகமாக இன்றே கடைசி!)

என் நண்பர் கணேஷ் அன்புவுக்கு இன்னும் ஒத்துக் கொள்ள முடியவில்லை போல.  வர்கலா பீச்சில் வைத்து இந்த விஷயத்தைப் பேசுவோம் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.  சென்ற கட்டுரைகளில் அதிகாரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  அதிகாரம் என்றால் என்ன? நம் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர்.  மிகப் பெரிய பதவி.  நீங்கள் காலையில் வாக்கிங் சென்று கொண்டிருக்கும் போது ஒரு சிப்பாய் உங்களைப் பார்த்து ஏய் இங்கே … Read more