தேவகோட்டை சந்திப்பு

வரும் 27.12.2015 அன்று (ஞாயிறு) காலை ஒன்பது மணி அளவில் தேவகோட்டை, ராம் நகர், தாய் மஹாலில் லயன்ஸ் சங்கத்தின் மண்டல சந்திப்பில் உரையாற்றுகிறேன். மாவட்ட ஆளுநர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் போன்றோர் பேசும் சபையில் ஒரு எழுத்தாளனை அழைத்து சிறப்புரை ஆற்றச் சொல்லும் அளவுக்கு தேவகோட்டையில் யாருக்கு தைரியம் என்று தெரியவில்லை.  இருந்தாலும் எல்லா இடங்களிலும் எனக்கு ஒரே பேச்சுதான்.  மதுரை நண்பர்களுக்கு நேரம் இருந்தால் வந்து கலந்து கொள்ளலாம்.  அன்று இரவே சென்னை திரும்புகிறேன்.

ஆ. மாதவன்

தினமணி இணைய இதழில் இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி ஆ. மாதவன் பற்றி எழுதியிருந்தேன்.  பிறகு உடனேயே அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் பலரிடமும் அவரது தொலைபேசி எண்ணைக் கேட்டேன்.  ஜெயமோகனைக் கூட தொடர்பு கொண்டு கேட்டேன்.  ஆனால் அவர் அப்போது கனடாவில் இருந்தார்.  அதற்குப் பிறகு பழுப்பு நிறப் பக்கங்களின் மற்ற எழுத்தாளர்களில் மூழ்கி விட்டேன்.  இருந்தாலும் அவ்வப்போது அவரைத் தொடர்பு கொள்வது சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.  திருவனந்தபுரத்தில் இருக்கும் … Read more

சினிமாவுக்கு வசனம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரு பாரிசிலிருந்து வெளிவரும் சிற்றிதழ் ஒன்றில் உதவியாசிரியராக பணிபுரிகின்றேன்.  உங்களுடைய பெரும்பாலான புத்தகங்களை படித்திருக்கின்றேன்.  தினம்தோறும் உங்கள் வலைமனையை வாசித்தும் வருகின்றேன். எந்திரன் பாகம் இரண்டு தொடங்கிவிட்டார்கள்.  அதற்கு நீங்கள் ஏன் வசனம் எழுதவில்லை?  அது இருக்கட்டும்.  பொதுவாகவே நீங்கள் ஏன் சினிமாவில் வசனம் எழுதுவதில்லை? நகுலேஸ்வரன் டியர் நகுலேஸ்வரன், பதில் ரொம்ப சுலபம்.  அடிக்கடி இந்தக் கேள்விக்கு பதிலும் சொல்லியிருக்கிறேன். உலகிலேயே தமிழர்கள் மட்டுமே புத்தகங்களை வெறுப்பவர்களாக இருக்கிறார்கள்.  வெறுப்பு என்றால் அப்படி … Read more